பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 69

தொடங்கியவர், இடங்களைக் கணக்குப் பண்ணிச் சொல்ல முடியாது என்று உணர்ந்து 'பிறவும்" என்று சொன்னர். 'ஆலமும் கடம்பும் ஆற்று நடுவும் குன் றமும்' என்று சொன்னவர், ‘இன்னும் பல பல உண்டு; அவற்றை யெல் லாம் ஒவ்வொன்றுக எடுத்துச் சொல்லுதல் இயலாத காரியம் என்று எண்ணினர்; இவைகளும் பிறவும் என்று சொல்லி முடித்தார். அப்படியும் அவருக்குத் திருப்தி பிறக்கவில்லை. எல்லா இடங்களிலும் நீயே எழுந்தருளியிருக்கிருய்' என்று கூறி ஆறுதல் பெறுகிருர்

எவ்வயிளுேயும் நீயே.

0ள்விடத்தில் இருப்பவனும் நீதான். எவ்வயிலுேப் முன்னிலை, தெய்வம் இருப்பதாகச் சொல்லும் இடங்களேயெல்லாம் முன்பு சொன்னர். இப் போது எல்லா இடங்களிலும் அவன் இருப்பதைச் சொல் கிரு.ர். ) -

அடியார்க் கெளியன்

இறைவன் எங்கும் இருக்கிருன்; பல உருவங்களும் பல குணங்களும் உடையவகை இருக்கிருன்; பல பெயர் களோடு இருக்கிருன். ஆலுைம் அவன் எல்லோராலும் அறியப்படுவது இல்லை. எங்கும் இருந்தாலும், ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திலும் இருந்தாலும் அவ உணர்ந்து அன்பு செய்து அதல்ை வரும் இன்பத்தை நுகர்ப வர்கள் மிகச் சிலரே. அந்த அன்பர்களிடத்தில் இறைவன் விளையாடுகிருன். அவர்களிடம் கட்டுப்பட்டிருக்கிருன். வேறு பொருள்களால் அவனேக் கட்ட முடியாதி. யசோதை கயிற்றில்ை கட்டப் பார்த்தாள்; முடியவில்லே. ஆல்ை அன்பர்களுடைய அன்பினல் தளப்படுபவன் அவன், சகாதேவன் அப் பெருமானேக் கட்டிவிட்டான்.