பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 71

பொருள் - அறம் பொருள் இன்பம் வீடென்பன (பரிமேலழகர்.) அரணம் - காவல். )

முதலில், கிருமாலினுடைய புகழ் சொல்வதற்கரிய தென்று கூறி, பின் அவன் கிருமேனியையும் உடை நேமி ஆகியவற்றையும் கினைத்து, பிறகு நரசிங்க அவதாரத் தையும் கேழலாக வந்த கோலத்தையும் புகழ்ந்து, அவ லுடைய தன்மைகளே உலகத்துப் பொருள்களெல்லாம் கொண்டிருத்தலச் சொல்லி, அவன் கொடியின் சிறப்பைப் புகழ்ந்து, வேண்டுதல் வேண்டாமையிலான் அவன் என்ப கைக் தெளிவுறுத்தி, மீண்டும் அவன் உருவ எழிலேயும் திரு வடிச் சிறப்பையும் குண நலங்களையும் எடுத்துரைத்து, அவன் இருக்கும் இடங்களை இயம்பி, எங்கும் இருப்பவன் என்பதையும் தெளிவுறுத்திய புலவர், ஆர்வலருக்கு அணி மையில் உள்ளவனுக இருப்பதைச் சொல்லிப் பாட்டை முடித்தார். ஆர்வலர் கின் புகழ் விரித்தனர்' என்று தொடங்கி, 'ஆர்வலர்க்கு அரணம் நீயே" என்று முடித்தார்.

பாட்டு இறைவனுடைய கலங்களைச் சொல்வதாக இருக்கிறதே ஒழிய, இன்னது வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. ஆயினும், இத் தகைய பெருமானிடம் நாமும் அன்பு செய்தால் அவன் அருளேப் பெறலாம் என்ற கருத்து நமக்குத் தோன்றும்படி அவன் தன் அன்பர்களுக்கு எளியம்ை தன்மையை இறுதியிலே சொல்லி முடித்திருக்கிருர், இறைவன் இயல்பு எத்துணைச் சிறப்புடையதாக இருந்தாலும் நமக்கு ஒரு பயனும் இல்லை. கமக்கு அருள் செய்யும் தன்மை அவன்பால் இருப்பதுதான் அவனுக்குப் பெருமை. அதனேயே இறுதி அடிகள் கிரினப்பூட்டுகின்றன. . -