பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை

மழை

δαπώ நிறைந்திருக்கும் கடலில் மேகங்கள் சென்று முகந்தன. இதற்கு முன் பல முறை நீரை முகந்தும் அது இன்னும் கிறைகடலாகவே இருக்கிறது. அதன்கண் நீரை. முகந்துகொண்ட மேகங்கள் வானப் பரப்பினிடையே எங்கும் பரவின; வான முழுவதையும் போர்த்து கின் முற். போல எங்கும் கிறைந்தன; மெல்லச் சென்றன; ரோகிய பாரத்தைத் தாங்காதவை போல கின்றன. அந்தப் பாரம் குறைய வேண்டுமானல் தாம் முகந்த நீரைப் பொழிந்து விட வேண்டும். ஆகவே நீர் துளும்பிக் கொண்டிருக்கும் அந்த மேகங்கள் பாரம் நீங்கி இளைப்பாற வேண்டி நீரைப் பொழிந்தன. 会 - -

கிறை கடல் முகந்து உராய் கிறைந்து நீர் துளும்பும்தம்

பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று வானம்.

0 நீரால் நிறைந்த கடலில் நீரை முகந்து வானத்தில் பரவி நிறைந்து, அப்பால் நீர் துளும்புகின்ற தம்முடைய பாரம் நீங்கி இளைப்பாறும் பொருட்டு, பொழிந்தன மேகங்கள், -

உராய் - உலவி, பரவி. பொறை - பாரம். தவிர்பு - நீங்கி. அசைவிட இளேப்பாற. பொழிந்தன்று - பொழிந்தது.