பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை T

பரிபாடலில் கடவுள் வாழ்த்தாக வரும் செய்யுட்கள் உபநிடதங்களைப் போல நுட்பமான பொருள்களே உடையவை. வேதத்தில் உள்ள கருத்துக்கள் பலவற்றை அவற்றிலே கண்டு மகிழலாம். பரிமேலழகர் தம் உரை யிடையே சில இடங்களில் வேதக் கருத்தை நினைப்பூட்டு கிருர்,

אר

கடுவன் இள எயினனர் பாட்டில் திருமாலின் பெருமை பல வகையில் அமைந்திருக்கிறது. அவன் திருவவதாரங்களின் சிறப்பு, அவனுடைய திருவுருவ எழில், அவன் எங்கும் எப் பொருளிலும் கலந்து நிற்கும் நிலை, பல தெய்வங்களாகவும் நிற்கும் இயல்பு, அவனுடைய அடியார் தன்மை,

அடியாருக்கு அப்பெருமான் எளியஞய் நிற்கும் திறம் முதலி யவற்றைப் புலவர் விரித்துரைக்கிரு.ர். -

திருமாலினுடைய திருமேனி நீல மணியைப் போலவும், அலேயட்ங்கிய கடலைப் ப்ோலவும், குல் கொண்ட முகிலப் போலவும் ஒளிர்கின்றது. அவ்னுடைய திருமார்பில் திருமகளே மறுவாக எழுந்தருளியிருக்கிருள். துழாய் நறுங் கண்ணியை அப்பெருமான் அணிந்திருக்கிருன். அவன் திருவிழிகள் தாமரையைப் போல உள்ளன், செங்கட் செல்வன் அவன். அவனுடைய திருவுந்தியிலிருந்து தாமரை தோன்றுகிறது. அவன் திருவிடையில் பொன்னடை பள பளக்கிறது. அவன் திருக்கரத்தில் சக்கரப்படை விளங்கு கிறது. அவனுடைய கொடி கருடன். அவனுடைய திரு வடியே அடியார்களுக்குப் பற்றுக் கோடாதலால் அது அவனைக் காட்டிலும் சிறப்புடையதாகத் தோன்றுகிறது,

அவன் குணப் பெருங்கடல். அருள் நிரம்பியவன். அவனி டமிருந்து எல்லாப் பொருள்களும் தம் தம் இயல்புகளைப் பெற்றன. சூரியனுடைய வெப்பமும் ஒளியும், சந்திரனுடைய தண்மையும் மென்மையும், மழைக்குரிய சுரத்தலும் வண்மை யும், பூமியின் காப்பும் பொறுமையும், காயாம்பூவின் மணமும் பொலிவும், நீரின் தோற்றமும் விரிவும், ஆகாயத் தின் உருவமும் ஒலியும், காற்றின் வருகையும் ஒடுக்கமும் எல்லாம் அவனிடமிருந்து வந்தவையே. * . -