பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தமிழ் வையை

கைக்குத் தள்ளில்ை அங்கே அவை கலகலக்கும். மகளிர் மார்பிலும் தோளிலும் சந்தனக் குழம்பால் கொடியின் உருவத்தை எழுதியிருப்பார்கள். அதற்குக் தொய்யில் என்று பெயர். அது உருவழிக் போகும். அவர்கள் இடையிலே அணிந்திருக்கும் மேகலைகள் மணி உதிர்ந்து வெறும் வடங்களாக கிற்கும். கல்ல சுடசை வீசும் முத்து மாலைகள், அழிந்த சந்தனக்கோடும் மற்றப் பொருள் களோடும் கலந்து தம்முடைய ஒளி மங்கிக் கோன்றும்.

மகளிர் தம்முடைய விரல் முகங்களில் சாயம் ஆசியிருப் பார்கள்; கன்னத்தில் செம்பஞ்சுக் குழம்பால் பொட்டு இட்டிருப்பார்கள்; சிலர் இலேசாகப் பூசியும் இருப்பார்கள். அந்தச் சாயமும் செம்பஞ்சுக் குழம்பும் ர்ே விளையாட்டில் கலந்துபோகும். மார்பில் சக்கனக் குழம்பு பூசியிருப் பார்கள். அதுவும் அழிந்து போகும். இக்க வண்ணப் பொருள்களும் சந்தனமும் நீரிலே கரைந்து வண்டலிடும். அந்த வண்டல் மணலோரங்களில் மண்டும், அவர்கள் அணிந்திருந்த இலே மாலையும் அவர்களுடைய கூக்கலும் ரோடும்போது அங்கும் இங்கும் புரளும், அதனுல் அவர்கள் மேனியிலே படிந்திருந்த சந்தனம் கன்முக அழிந்து போகும். துடைத்து விட்டாற்போல அவை அழியும். இவ்வாறு மகளிர் நீரில் விளையாடும்போது அவர்களுடைய காதலரும் அவர்களுடன் ஆடி மகிழ்வார்கள். மகளிர் தனங்களிலும் ஆடவர் மார்புகளிலும் அணிந்த ஆபரணங்கள் ஒன்ருேடு ஒன்று கலந்து பொருந்தும். இப்படி ர்ேவிளயாட்டு இனிமேல் நிகழும்படியாக வையையிலே புனல் பெருகி வ5 திது,

காதலர் ஒன்றுபட்ட உள்ளத்தினராய் ர்ே விளையாட்டு நிகழ்த்துவார்கள். அவர்களுடைய உள்ளக்கில் காதல் பொங்கும். மற்ற வேளைகளில் அவர்கள் தம் காதலைப்