பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ் 83

15. கொடி - தொய்யில்; கொடி போன்ற உருவத்தை எழுதுதலின் இப்பெயர் பெற்றது. சோர - தன் உருவம் கலைய, திருக்கோவை - அழகிய கோவைகளாலாகிய மேகலை. மேகலை எட்டுக் கோவை, பதிறுை கோவை, முப்பத்திரண்டு கோவையெனப் பலவகைப்படும். காழ் - வடம். உ.ம்பு பூரித்தலாலும் நீர்விளையாட்டிலுைம் மேகலையில் உள்ள மணிகள் உதிரவே, வெறும் வடம் மாத்திரம் நின்றது.

16. தொகு கதிர்-தொகுதியாகச் சேர்ந்த ஒளி. தொகு முத்து என்றும் கூட்டிப் பொருள் கொள்ளலாம். முத்துத் தொடை - முத்துமாலை; இது மார்பில் அணிந்தது. கலிழ்பு. கலங்கி; விளையாடுதலால் புரண்டு கலங்கியது. மழுக . சந்தனம் முதலியவற்றில் புரண்டு அலைவதால் நிறம் மங்க.

17. நகத்திலும் கன்னத்திலும் சிவப்புச் சாயம் பூசுவது இன்றும் உள்ள வழக்கம். உகிர் - நகம். கொடிறு . . கபோலம்; கன்னம். உண்ட - பூசப் பெற்ற. செம்பஞ்சி . ஒருவகைச் செந்நிறக் குழம்பு. .

18. நகில் - தனம், அளறு - சேறு இங்கே சந்தனக் குழம்பு. வண்டல் மண்ட வண்டலாகச் செறிய நீரின் ஒரத்தில் மணலின்மேல் வண்டலாகப் படிந்தது.

19. இலை என்றது இலேம்ாலையை: அதைப் படலை என்று சொல்வார்கள். ஈர்ம் சாந்து ஈரமாகிய சந்தனம். நீராடும் பொழுது நீரினல் சந்தனம் ஒரளவு அழிய, எஞ்சியதை இல் மாலையும் கூந்தலும் நிலைகுலைந்து போக்கின. நிழத்தகுறைக்க அழிக்க. -

20. மார்பு என்றது ஆடவர் மார்பை, முயங்கு-பொருந் கிய மயங்கல் ஒன்ருேடொன்று கலத்தல். இருவரும் தழுவி யமையால் இப்படி. ஆயின. १