பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தமிழ் வையை

21. விருப்பு:அன்பு நிறை-நிறுத்தும் ஆற்றல். உடைத் தென-உடைத்ததென உடைத்தாலென என்றும் விரிக்க லாம்.

22. வரைச்சிறை-மலையைப் போன்ற அணேயை, உடைத்ததை: ஐ, சாரியை.

23. திரையாகிய சிறகுகள், படபடவென்று பறவைகள் சிறகுகளே அடித்துக் கொள்வது போல அலேகள் தோற்று தலின் அவற்றைச் சிறையாக உருவகம் செய்தார். கரைச் சிறையை உடைத்தன்று. சிறை-கட்டுக்காவல். அறைக எனும் என்பது அறைகெனும் என விகாரம் ஆயிற்று. கரை உடைப்பது கண்ட காவலர் பறையடிப்பாரை நோக்கி ஊராருக்குச் செய்தி தெரியும்படி பறையறையச் சொன் ஞர்கள். -

24. உரைச்சிறை - உரையின் புறத்தே. உரையாகிய காவலோடே என்பது பரிமேலழகர் உரை. பறை எழ-பறை யின் ஒலி முழங்க. ஊர்.ஊரில் உள்ளார்; ஆகுபெயர். ஒலித்தன்று-ஆரவாரித்தது.

தோள் தொடியைச் செறித்தல் முதலிய செயல்கள் நிகழும்படியாக, வையையில் நீர் அனேயே உடைத்துக் கரையை உடைத்துப் பாய்ந்தது. இனி நிகழப்போகும் செயல்களை இங்கே நினைப்பூட்டிஞர். ை

புனலாடப் போதுவார்

ஊரினர் ஆரவாரித்ததற்குக் காரணம் வையை யாற்றில் புனல் விளையாட்டு சிகழ்த்தலாம் என்ற எண்ணமே. அவர்கள் வையை ஆற்றை நோக்கிக் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டார்கள். மகளிரும் மைந்தரும் புறப்பட்டார்கள். வீரர்கள் போருக்கு அணி அணியாக வகுத்துக் கொண்டு செல்லும் கூட்டத்தைப்