பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தமிழ் வையை

போலவே வேகமும் இகலும் (போட்டி) உடையவர்களாகப் போய்க்கொண்டிருந்தார்கள். ஆம்; அவர்கள் ர்ேவிளே யாட்டையே போரைப் போல கிகழ்த்தப் போகிருர்கள். வையை ஆற்றையே அவர்கள் தங்கள் போர்ககுக் களமாக விரும்பி, அந்தப் போரிடையே வெல்வதற்கு ஏற்ப வலிமை யுடன் சென்ருர்கள். அணியணியாகச்சென்ருர்கள். போரில் படைக்கலங்கள் உண்டல்லவா? இங்கும் சில கருவிகள் உண்டு. அந்தக் கருவிகளுடன் சென் ருர்கள். போரில் முன்னலே செல்லும் படைக்குத் தார் என்று பெயர். இங்கும் இளேயரும் இளைய மகளிரும முன் வரிசையிலே கையில் சில கருவிளோடு கடந்தார்கள். ர்ேக் கரையிலே புகுந்து தம்முடைய போரை கிகழ்ந்த அங்குள்ள துறைக் கண்ணே இறங்கப் போகிறவர்கள் அவர்கள்.

ஏர் அணி அணியின் இளையரும் இனியரும் ஈர் அணி அணியின் இயல் மிக கவின்று தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண் 30 துணிபுனலாகத் துறை வேண்டும் மைந்தின்

அணி அணியாகிய தாரர் கருவியர் அடுபுனலது செல. அவற்றை இழிவர்.

e அழகாக அணிந்த அணிகளேயுடைய இஃ மைத் தரும் அவருக்கு இனிய மகளிரும், நீராட்டுக்குரிய அலங் காரங்களுடன் போட்டியை மிக விரும்பி, குளிர்ந்த நீரில் ஆடுகிற அழகு மிக்க போரில், தமக்குரிய போர்க்களமாக நீர்த் துறையை விரும்பும் வலிமையோடு, வரிசை வரிசை யாக அமைந்த தூசிப் படையைப் போன்றவராகி, நீர்வீசு கருவிகளை உடையவராய்,கரையை மோதுகின்ற புனல் ஓடிக் கொண்டிருக்க, தாம் விரும்பிய அத்துறைகளிலே இறங்குவா ரா.கி.

இழிவர்: முற்றெச்சம்; இழிவராகித் திரீஇ எனப் பின் வரும் சொல்லோடு முடியும்.