பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தமிழ் வையை

குதிரைக் கூட்டம் வேறு. மற்றக் காலங்களில் யானைகள் விருப்பப்படி கடை போடலாம்; குதிரைகளும் இடசாரி வலசாரியாக ஓடலாம். ஆளுல் இந்தக் கூட்டத்தில் கம் விருப்பம்போல் போக முடியுமா? சாரிகையை மறுத்து ஒரே வழியிலே நெருங்கிச் சென்றன. அவற்றின் மேலே ஏறிச் சென்றவர்களும் அவற்றின் போக்கிலே விட்டு அவை போன வழியே திரிந்தார்கள்,

கைம்மான் எருத்தர் கலிமட மாவினர் கெய்ம்மாண் சிவிறியர் நீர் மணக்கோட்டினர் 35. வெண்கிடை மிதவையர் கன் கிடைத் தேரினர் சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை ஓர் இயவு உறுத்தர ஊர்பு ஊர்பு இடங் திரீஇ ைசிலர் யானைகளின் சுழுத்தின்tேல் ஏறியவாய், சிலர் ஆரவாரத்தையுடைய மெத்தென்ற தடையையுடைய குதிரையில் ஏறியவராய், புனுகு சிறந்திருக்கும் துருத்தியை உடையவராய், பனி நீரால் மணத்தைப் பெற்ற கொம்பை உடையவராய், வெள்ளே நெட்டியாற் செய்த தெப்பத்தை உடையவராய், பல வண்ணம் உளட்டிய நல்ல நெட்டியாற் செய்த தேரை உடையவராய், தாம் இயல்பாகச் செல்லும் கதியை மாற்றிக் குறையாத யானைத் திரளும் குதியைத் திரளும் ஒரு வழியிலே நெருங்கிச் செல்ல அவற்றை ஊர்ந்து ஊர்ந்து (மகளிரும் மைந்தரும்) இ.ந்தோறும் கி.ல்)ெ.

கருவியராகி (31), இழிவராகி(32). எருத்தராகி, மாவின ரா.கி (33), சிவிறியராகி, கோட்டினராகி (34), மிதவைய ராகி, தேரினராகி (35)த் திரீஇ என்று கூட்டுக.

திரீஇ என்பது திரிந்து என்ற பொருள் உடையதேனும் திரிய என்று கொள்ளவேண்டும்; இது எச்சத் திரிபு.

கைம்மான்-யானே. எருத்து-கழுத்து. கலி-ஓசையை யுடைய, கனைப்பையுடைய நீராடச் செல்லும் கூட்ட மாத