பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழ் வையை

அவன் அறஞ் செய்வாருக்கு இன்பமும், மறம் புரிவாருக் குத் துன்பமும் அளித்தாலும் அவை இரண்டும் விருப்பு வெறுப்பால் அளிப்பன அல்ல. அவனுக்குப் பகைவரும் இல்லை; நண்பரும் இல்லை. அவனுக்கென்று வடிவும் இல்லை. ஆயினும் அடியார் நினைத்த வடிவிலே எழுத்தருளி வருவான். ஆலம்ரத்தினடி முத்லிய இடங்களில் வெவ்வேறு பெயரோடு மக்கள் வணங்கும் தெய்வங்கள் பலவாக இருப்பவனும் அவனே. -

அவனுடைய அடியார் புலப்பகையை வென்றவர் உயிர் களிடத்தில் அன்புடையவர். அவனே அவர்கள் பலவாறு தொழுது ஏத்துகின்றனர். ஆயினும் அவனே முற்றப் புகழ்வது இயலாத காரியம், அடியார்கள் கும்பிடும் கைக்குள்ளே அடங்கி அவர்களுக்கு ஏவலாளனைப் போல இருந்து அவர் களைப் பாதுகாக்கும் பேரருள் படைத்தவன் அவன்.

இரணியனக் கொன்று பிரகலாதனுக்கு அருள்புரியும் பொருட்டு நரகிங்க அவதாரம் எடுத்தான். உலகத்தை எடுக்கும் பொருட்டு வராகாவதாரம் செய்தான்.

இறைவனுடைய அடியாரை ஆர்வலர் (2, 70) என்று குறிக்கின்ருர் புலவர். பிரகலாதனைப் பிருங்கலாதன் என்று சொல்கிருர். ஐம்பொறிகள் வாயிலாகச் செல்லும் அவாவை ஐந்திருள் என்பர். நாங்கள் உன்னைப் புகழ்வதைக் கண்டு நீ நகை செய்வாய். ஆயினும் நாங்கள் எங்கள் ஆர்வத்தால் துதிக்கப் புகுகின்ருேம்’ என்று பாட்டின் தொடக்கத்தில் சொல்கிரு.ர். நரசிங்காவதாரத்தைப் பற்றிச் சொல்லும் போது, இறைவன் தோன்றிய தூண் பிளந்து அதன் . துண்டு கள் கீழே விழும்பொழுதே இரணியனுடைய உடலைப் பிளந்த துண்டுகளும் உடன் விழுந்தன என்று பாடுகிருர், இரணிய சங்காரத்தின் வேகம் இதல்ை புலப்படுகிறது.

கருடனைப் பற்றிச் சொல்கையில் அவன் பாம்பைப் பல வகையில் பயன்படுத்திக் கொள்வதை வருணிக்கிரு.ர். பனே, கலப்பை, யானை என்னும் பிற கொடிகள் திருமாலுக்கு இருந்தாலும் கருடக் கொடியே மிகச் சிறந்த தென்கின்ருர்.

கினக்கு, மாற்றேரும் இலர் கேளிரும் இலர் "