பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை 9 to,

வலிமை உடையோ ரல்லாதார் ஆகியோர் துறைதோறும் விழாவை விரும்பி நின்று பார்க்க, மெலியர் அல்லாதார் நீருக்குள்ளே புகுந்து புதுப் புனல் விளையாட்டைச் செய்ய, அதனுல் பல வாசனைப் பொருள்கள் ஊறிய சாரமாகிய நீரும் சந்தனக் குழம்பும் வாசனைத் தைலமும் புனுகும் பூக்களும் கலந்து மணம் வீசிச் செல்லும் வையையாறு, தான் வரும் வழியில்.

சேரி-புறஞ்சேரி; இங்கே பிற நாட்டிலிருந்து வந்த யவனர் முதலியவர்கள் இருந்தார்கள். செலவரு நிலையர் என்பது பாணர் முதலியோரை துறை அயர-துறையை விரும்ப சேரி இளைஞரே செலவரு நிலேயர் என்று பரிமே லழகர் கொண்டு, காதலாற் செல்லும் புறச்சேரியில் இளை யர் செல்லுதற்கரிய நிலயராக என உரை எழுதுவர். விருந்து-புதுமை. அயர-விளையாட்டைச் செய்ய, சாறுசாம். 'பத்துத்துவர் முதலாயின ஊறின நீர் (பரிமேழலகர் ) சேறு-குழம்பு இங்கே சந்தனக் குழம்பு. நெய்-வாசனத் தைலம்; புழுகு நெய். நாறுபு-மணம் வீசி. நிகழும்" செல்லும், வரலாறு-வருகிற வழியில். இவ்வியாறு வருகின்ற வாறு' என்பர் பரிமேலழகர்,

வையையாற்றில் ரோடிக் காலையில் செய்தற்குரிய கடன்களேச் செய்தற் பொருட்டு அந்தணர் வந்தனர். வேதத்தை விரும்பி ஒதும் அவர்கள் ர்ேத் துறைக்கு வந்த போது அதில் ஒருவகை மணம் வீசுவதைக் கண்டார்கள். மூழ்குவதற்கும் ஆசமனம் முதலியன செய்வதற்கும் ஏற்றது தாய மீரே. தூயதல்லாத ரிேலும், வெந்நீரிலும் கடன்களை இறுத்தல் முறையன்று. எப்போதும் போலன்றி நீர் புதிய மணம் வீசி வேறுபட்டதைக் கண்டு அவர்கள் மருண் டார்கள். ம்களிரும் மைந்தரும் பூசியிருந்த வாசனைப் பொருள்களைக் கழுவி வந்த கலங்கல் ர்ே ஒன்றும் செய் வதற்கு rற்றதன்று என்று எண்ணி, அதில் நீராடவில்லை;. ஆசமனமும் செய்யவில்லே. -