பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தமிழ் வையை

காறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து 兹 வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழைப் 45. புலம்புரி அந்தணர் கலங்கினர் மருண்டு.

6 மணம் வீசிச் செல்லும் வையை யாற்றைக் கண்டு, இது தன் இயல்பு மாறி வேறுபட்ட நீர் என்று எண்ணி, மகளிரும் மைந்தரும் பூசிய வாசனைப் பண்டங்களைக் கழுவு தலேயுடைய கலங்கல் நீரை, வேதத்தை விரும்பி ஒதும் அந்தணர் கண்டு மருண்டு கலங்கினர்.

நாறுபு - மணம் வீசி, அழிந்து - தன் இயல்பு நீங்கி, வேறுபடு புனல் - வேருண இயல்பைப் பெற்ற நீர். விரைவாசனைப் பொருள்கள். மண்ணு . மண்ணுதல்; கழுவுதல்: கலிழை கலங்கல் நீரை. புலம் - வேதம். புரி - விரும்பும், கலங்கினர் - மனம் குழம்பினர். மருண்டு - வியப்ப.ைந்து. இவ்வாறு வருதற்குக் காரணம் என் என்று வியந்தனர். கலங்கினர் என்பதற்கு, நீராடலும் வாய் பூசலும் முதலிய தம் தொழில் செய்யாது நீங்கினர்' என்று உயை எழுதுவர் பரிமேலழகர். e

அந்தணர் மாத்திரம் வேறுபட்ட வையை ைேரக் கண்டு மருண்டு கலங்கினர் என்பது இல்லை; மற்றவர்களும், 'இந்த நீர் உண்ணப் பயன்படாது' என்று கண்டு tங்கினர். அவர்கள் நீரின் மணத்தை மாத்திரம் கண்டு விலகவில்லை. அதில் வரும் பொருள்களைக் கண்டபோது அதனேப் பருக மனம் கொள்ளவில்லை. அவர்கள் கண்ணிற் பட்டவை எவை?

புனல் விளையாட்டு நிகழ்த்க வந்த மகளிர் கம் கூந்தலிலே செருகியிருந்த மலர்களே எடுத்து எறிந்து நீராடினர்கள். அந்த மலர்கள் வையை யாற்றிலே மிதந்து வந்தன. மைந்தர்கள் மார்பிலே அணிந்த மாலைகள் கழன்று வந்தன; மகளிர் அணிந்த கோதைகளும் வந்தன.