பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை 93.

ஆடவர் அணியும் மாலையைத் தார் என்றும் மகளிர் அணிவதைக் கோதை என்றும் சொல்வது மரபு. ர்ேவிளை

யாட்டில் ஈடுபட்டவர்கள் கழித்த மலரும் தாரும் கோதையும் மிதக்து வந்தன.

இவைகள் யாவும் நகர மக்கள் ரோடும் இடத்திலே கலந்த போருள்கள். ஆனல் முன்பே வையையாற்றில் வேறு பொருள்களும் வருகின்றன. புது வெள்ளமாதலின் இரு கரைகளிலும் உள்ள பொருள்களே. அடித்துக்கொண்டு வருகிறது ஆறு. பல மரங்களின் வேரைப் பறித்து அங்க வேரையும், மரத்தடியிலே உள்ள தாரைப் பறித்து அதனையும், மரஞ் செடி கொடிகளின் காயையும் கொடி களின் கிழங்கையும் பறித்து அவற்றையும் அடித்துக் கொண்டு வருகிறது ஆறு. வரும் வழியில் இழிவான பழக்க வழக்கங்களை உடைய யூரிய மாக்கள் புனலேக் கண்டவுடனே ஆரவாரம் செய்கின்றனர். அதன் கரையிலே குதித்துக் கொம்மாளம் போட்டு விருந்துண்கின்றனர். அவர்கள் விருக்கில் ஊனும் கள்ளுந்தானே இருக்கும்? அவர்கள் பன்னடையால் வடிகட்டிய கள்ள நுகர்கின்றனர்; அந்தக் கள்ள உகுக்கின்றனர். அவர்கள் உண்டு ஒழித்த ஊனும், உகுத்த கள்ளும் வையை யாற்றின் தூய்மையைக் கெடுக்கின்றன. .

மலரும் காரும் கோதையும் கலப்பதல்ை வையை யாற்று ர்ே வேற்று மணம் உடையதாயிற்று; வேரும் தாரும் காயும் கிழங்கும் வருவதல்ை தெளிவற்றுக் கலங்கிய தாயிற்று; ஊனும் கள்ளும் கலப்பதால் அதன் கலன்ே அறிந்துவிட்டது. இவற்ருல் வையை நீர் துரியது, தெளிந்தது, ஆடுதற்குரியது, பருகுகற்குரியது, ஆடை வெளுப்பதற்குரியது என்று பலபடியாகக் சொல்லும் இயல்புகள் யாவும் மாறிவிட்டன. வெள்ளம் வந்தாலும்: