பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை 95

வே. - இ. ல்பு ஆகின்று ஆகின்றது. என எனச் சொல்லிப் பிறரும் நீங்க. புனலது செலவு இருந்தது என ஒரு சொல் வருவித்து முடிக்கவேண்டும்.

புனலின் உரை

விடியற் காலையில் தமிழ்ப் புலவர்களின் புகழைப் பெற்ற வையையின் புனல் மதுரைக்குள் வந்த அழகு கண் கொள்ளாக் காட்சி. தமிழ் வையைத் தண்ணம் புனல் அந்த விடியற் காலேயில் ஒரு செய்தியுடன் வந்தது. இரவில் தம்முடைய காதலிமாரோடும் திருப்பரங்குன்றத்தில் கட்டிளங் காளேயர் இன்புற்றுத் தங்கிய செய்தியை, அந்த இன்பத்தைப் பெருதவர்களுக்கு உரைக்க வந்தது போல வையைத் திம்புனல் படர்ந்தது.

குன்றத்தினின்றும் அருவிக்கால் இழுமென்ற ஒசை யோடு இறங்கியது. அந்த அருவி காதலர்கள் இனிது தாங்குவதற்குப் பாடும் தாலாட்டுப் பாட்டைப் போல இருந்தது. அங்கே காற்றுக்குப் பஞ்சம் உண்டா? அதற் குத் தடைதான் உண்டா? தடையின்றி வருகின்ற தாய காற்று, உருவமற்ற அரூபியாக இருந்தாலும் அது வீசும் போது ஒரு வகை இன்னெலியை உண்டாக்கியது. அந்தக் காதலர்களின் இன்ப கிலேயை அது பாராட்டியது போலும் இப்படி அருவிக்கால் தாலாட்டவும், அரூபி யான காற்றுப் பாராட்டவும் தம் காதல் மங்கையரின் தனங்களின் இடையே ஆடவர் இரவிலே அளவளாவித் தாங்கும் சிறப்புடையது முருகன் எழுந்தருளிய திருப்பரங்' குன்றம். இந்தச் செய்தியைச் சொல்லுவதுபோல வையை ர்ே ஊரிடை ஒடி வந்தது. தம் காதலரோடு கூடாமல் தனித்திருக்கும் மகளிருக்கு, அவர்களுடைய கணவர்கள்