பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

197 பெப்சுவில் ஆடவருக்கு 2-8-0; பெண்ணுக்கு 1-8-0. மேற்கு வங்கத்தில் ஆடவருக்கு 1 120; பெண்டிருக்கு 1-1-0. கொத்துவேலை கொல்லன்வேலை போன்ற வகைகளில் ஈடுபட்டவர்களுக்கு, இங்கு, 2 ரூபாயிலிருந்து 3 ரூபாய் வரை யில் கிடைக்கிறது. பெப்சுவில் நாலு முதல் ஐந்து வரையில் கிடைக்கிறது. வடக்கு ஆதிக்கம் செலுத்துவதால் வந்துற்ற அவதியை விளக்க, இந்தப் புள்ளிவிவரம் போதாதா? போதும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்காதவருக்கு, நாட்டுப் பற்றினை இழந்து சோற்றுத் துருத்தியாவது கேவலம் என்ற உணர்ச்சிகொண்ட அனபர்களுக்கு எம்மிடம் என்ன இருக் கிறது தெரியுமா, சக்கரம் - சம்மட்டி என்று 'விருதுகளை'க் காட்டியே வாழ்ந்துவிடலாம் என்று எண்ணிக் கிடப்பவர் களுக்கு, புள்ளி விவரம் மட்டும்போதாது, தம்பி, பன்னிப் பன்னிச் சொல்லியாகவேண்டும், பள்ளிச் சிறுமிகள் பாடிக் காட்டினார்களாமே கவர்னருக்கு. அதுபோலப் பாடியும் காட்டவேண்டாம், நாடகம் கூடத்தான். எல்லாம் எதற்கு? எங்கள் நாடு எழில் பொங்கும் நாடு இனி எவர்க்கும் அடிமை அல்ல எமக்கது சொந்த நாடு! திராவிட நாடு! திராவிடர்க்கே! என்ற எழுச்சிப் பண்பாடி, தாயகத்தின் தளைகளைப் போக்கி, தன்னரசு காணத்தான். தம்பி, இத்தகைய உன்னத மான பணியாற்றும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது பற்றி எண்ணும்போது புத்தார்வம் பிறக்கிறதல்லவா? 18-9-1955 அன்புள்ள, Jimmying