பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

கடிதம்: 11. தம்பி, போர்! போர்!! பெரியாரின் கொடி எரிப்புப் பேராட்டமும் தி.மு.க.வும். போர்! போர்! போர்!-இப்போது உலகிலே ஒரு பயங்கர மான போர் மூண்டு, மனிதகுலமே அழிக்கப்பட்டுப் போய் விடுமோ என்று அறிவாளர்களெல்லாம் அச்சப்பட்டுக்கொண் டிருந்தார்களே, அத்தகைய போர் எழாது, என்று தைரியத் துடனும் மகிழ்ச்சியுடனும் கூறிக்கொள்ளக்கூடிய சூழ்நிலை மலர்ந்திருக்கிறது - துள்ளித் திரியும் குழந்தைகள், மொட்டு கள், பிஞ்சுகள். சமர்ச் சூறாவளியால் பாழாகா என்ற தைரியம் பிறந்திருக்கிறது. இது, உலக நிலையைப் பொறுத்துக் காணப்படும், களிப் பூட்டும் செய்தி. ஆனால் இங்கே, நமது மாநிலத்தில், போர்! போர்! போர்! என்ற முழக்கம், பல்வேறு முனைகளிலிருந்து கிளம்பி விட்டது. ஜல்லடம் கட்டி, சங்கம் ஊதி, கட்கமேந்தி, களம்குதித் தோட, கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டு கணக்கற்றவர் கள் (போர் முடிவு பெற்ற பிறகுதானே கணக்குத் தெரிய முடியும்) உள்ளனர். போர்! போர்! எல்லையைக் காத்திடும் ஏற்புடையதோர் பேராட்டம் வருகுது! தொல்லைகளைத் துடைத்திடுவோம், துடை தட்டிக்கொண்டு வாரீர், துந்துபி கேனீர், துரிதமாக வாரீர்- என்றோர் புறமிருந்து முழக்கம் கேட்கிறது. கோவா அட்டூழியத்தைக் காணீரோ! அந்த அக்ர மத்தை ஒழித்திட அனைவரும் ஒன்று சேரீரோ! என்று மற்றொருபுரம், முழக்கம் கிளம்புகிறது! ஆலயங்களிலே அர்ச்சனை நம் அருந்தமிழ் மொழி யிலன்றே இருத்தல் வேண்டும், அத்திக அன்பர்காள்! அஞ் சாது போரிட வாரீர், அரன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெஞ்சமரில் ஈடுபட வாரீர், என்று வேறோர் போர் முழக்கம் கேட்கிறது.