பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

103 பாட்டாளிகளின் துயர் துடைக்கும் போரன்றோ போர்! மற்றவை பேரளவு போர் என்ற பெயர் பெறுதலும் ஆகுமோ! ஆண்மையாளர்களே! அணிவகுத்து நில்லுங்கள்! அழைப் பைச் செவியில் கொள்ளுங்கள்! போர்! போர்! புத்துலகம் காணப் பெரும் போர்! புனிதப் போர் ஒரே போர்! ஒப்பற்ற போர்!- என்று கம்யூனிஸ்டுக் குரல் கணகணவென ஒலிக் கிறது. பெரியாரின் ஆகஸ்ட்டுப் போர் பற்றிய அறிவிப்பும் வந்து விட்டது. ஆகஸ்ட்டு முதல் நாளன்று தேசீயக் கொடிகளைத் கொளுத்தி, அதன்மூலம் வடநாட்டுச் சர்க்காரை, திராவிடக் தின் மன நிலையை அறியும்படி செய்வது என்பது, போர்த் திட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காமராஜர் ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருக்கும் போக்கிலேயே பெரியார் சென்று கொண்டிருப்பார், திராவிட நாட்டுக்கான பிரச்சினைகளைக் காலாவதி ஆகும்படி செய்து விடுவார் என்று எண்னிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் திடுக்கிட்டுப் போயிருப்பர், இந்தப் போர்த் திட்டம் கேட்டு. இந்தத் தீனா மூனா கானாக்களுக்கு அரசியல் நாகரீகமேதெரிய வில்லை - பெரியார், கம்யூனிஸ்டுகளை ஒழித்தாக வேண்டும் என்ற புனிதமான(!) கோட்பாட்டுக்காக, இடைத் தேர்தல் களில் காங்கிரசை ஆதரித்து வருகிறார் இது அல்லவா யூகம் அரசியல் கண்ணியம் - ஜன நாயகம-என்றெல்லாம் பேரிகை கொட்டினர், காங்கிரசின் சின்னசாமிகள் அவர்கள் கண்டார் களா பெரியாரின் மன திலே உருவாகிக் கொண்டுள்ள போர்த் திட்டம் பற்றி. இப்போது ஆகஸ்ட்டுப் போர்பற்றி அவர் அறி வித்ததும், அந்த வட்டாரம், திகைத்துப்போய்க் கிடக் கிறது. தம்பி, நமது வட்டாரத்திலே என்ன கருத்து நிலவுகிறது என்பதைக் கேட்க ஆவலாக இருப்பாய்; கேள். 0 0 0 (1) ஆகஸ்ட் கிளர்ச்சியில் ஈடுபடும்படி எல்லாக் கட்சி களையும் அழைக்கிறேன் என்று பெரியார் கூறுவதன் பொருள் என்ன? ஓஹோ! எல்லாக் கட்சிகளும் என்றதும், உனக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது: சகஜந்தான்! எல்லாக் கட்சி களும் என்றால், நாட்டிலே உள்ள கட்சிகள் எல்லாம் என்று பொருள் கொள்ளலாமா! பொருத்தமாக இராது! காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பிரஜா, இந்து மகாசபை,தமிழ ரசு ஆகிய கட்சிகள் யாவும், இந்திவிஷயமாகக் கொண்