பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

104 டுள்ள எண்ணம், இந்தி கூடாது என்பதல்ல; கட்டாயப் படுத்த வேண்டாம்;அவசரப் படுத்தவேண்டாம் என்பது தான். பெரியார், இந்தி கூடாது, ஏனெனில் இந்தியா வின் ஆட்சிக்குள் திராவிடம் இருத்தல் கூடாது என்று கொள்கை வகுத்துக் கொண்டவர். எனவே இந்தியை எதிர்த்து பெரியார் நடத்தும் கிளர்ச்சியில் அந்தக் கட்சி கள் எதுவும் ஈடுபடாது; அக்கரை காட்டாது. (2) அப்படியானால், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபடக் கூடிய நிலையில் உள்ள கட்சி. திராவிட முன்னேற் றக் கழகம் மட்டும் தானே ! ஏன், பெரியார், தி.மு க.வுக்கு அழைப்பு என்று பேசவில்லை. என்னைக் கேட்கிறாயே! (3) கட்சிகள் பல ஒன்று கூடி, ஒரு கிளர்ச்சியில் ஈடுபடு வது உண்டா? ஏன் இல்லை! உண்டு!! இலட்சியம் ஒரேவிதமாக இருந்தால், ஒன்று கூடுவது சாத்தியமே (4) அதற்கு ஏதேனும் முறை இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது! அந்தக் கட்சிகள் ஒன்றாகக் கூடிக் கலந்துபேசித் திட்டம் வகுத்துக்கொண்டு பிறகு செயலில் ஈடுபடுவது. முன்பு ஒரு முறை நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கான திட்டமும் முறையும் வகுத்துக்கொள் வதற்காக, இந்தி எதிர்ப்பு சம்பந்தமாக ஒத்த கருத்தை வெளியிட்டு வந்த ம.பொ.சிவஞானம் அவர்களை அழைத்து, மாநாடுகளிலும், கமிட்டிக் கூட்டங்களிலும் கலந்துபேசி, திராவிடர் கழகம் (அப்போது நாம் அங்கே தான் ) பணியாற்றி - ஜன நாயகப் பண்பை எடுத்துக் காட்டி இருக்கிறது. ம.பொ.சி அப்போதும் தமிழரசுக் கழகம் தான் நடத்திக் கொண்டிருந்தார். (5) பெரியார் அப்படி ஏதும் செய்யக் காணோமே? தேவையில்லை என்று அவர் கருதியிருக்கலாம். தி.மு.க. பொதுச் செயலாளரை அழைத்துப் பேசி, திட்டம் வகுத்தால், ஒன்று கூடிக் கிளர்ச்சி நடத்தும் ஆர்வம் ஏற்படும் என்று கூட வேண்டுகோள் விடப்பட்டது. (6) ஏன் அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது? ஏழை பேச்சு அம்பலம் ஏறுமா? (7) இப்போது, எல்லாக் கட்சிகளையும் அழைப்பதன் பொருள்? நல்ல திட்டம் என்று நம்பி, வருவதானால் வாட்டும் என்பது தான். (8) வராவிட்டால்?