பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

107 களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேசம் ஏற்படவே முடியாத ஓர் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுவிடும்; எனவே வேறு முறையைக் கொள்வோம் என்று எடுத்துச் சொல்லி இருப்போம். இன்று நமது கருத் தினை ஏற்றுக் கொள்ளாமலிருக்கும் காங்கிரஸ்காரர் களே, நமது கோரிக்கையை உணர்ந்து, மனம் மாறி நமது இயக்கத்துக்கு ஆக்கம் தேடுவதற்கான உதவி அளிக்க முன்வரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதாக நமது கிளர்ச்சி இருக்க வேண்டும். அவர்கள் கேட் டாலே வெறுப்பும் வேதனையும் அடையதக்க முறை சரியாகாது, அவர்களை நம்மோடு அழைத்துச் செல்லும் வழியுமாகாது, இந்தக் கொடி கொளுத்துவது என்பதை எடுத்துச் சொல்லி இருந்திருப்போம். நாம் இப்படிச் சொல்லக்கூடும் என்பதை அறிந்துதானோ என்னமோ கொடி கொளுத்தும் திட்டம் தீட்டும் கமிட்டிக்கு நமது பொதுச்செயலாளரை அழைக்கவில்லை. பிள்ளையார் உடைப்பின் போதே, நாம், நம்மோடு நாளாவட்டத் தில் வந்து சேர வேண்டியவர்களை, வீணாக வெறுப் படையச் செய்துவிடும் என்றதனால் தான், ஒதுங்கி இருந்தோம். (14) ஒதுங்கி இருந்தால் ஒழிந்து விடுவார்கள் என்று பேசுகிறார்களாமே! திராவிட முன்னேற்றக் கழகம், போராட்டங்களை நடத்தி இருக்கிறது - தனித்து நின்று. திராவிட முன்னேற்றக் கழகம், பிறர் துவக்கிய போராட்டம், தாங்கள் தீட்டிய திட்டத்துக்கு ஒத்ததாக இருந்த நேரத்தில், துணையாக இருந்திருக்கிறது. வடநாட்டு மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி காட்டி தடியடி, சிறை இவைகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் தாங்கிக் கொண்டது. துணை யாரும் கிடையாது! அழைக்கவும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம், பிறர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், ஒதுங்கியும் இருந்திருக்கிறது. 144 தடையை மீறி, தடியடி சிறைமட்டுமல்ல, துப் பாக்கிக் குண்டுகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது, திரா விட முன்னேற்றக் கழகம் - தனியாகக்களத்தில் இறங்கி. இரயில் நிறுத்தம், ஆச்சாரியார் வீட்டின்முன் மறி யல் - என்பவைகள், மாற்றுக் கட்சிக்காரரெல்லாம்கூட மறக்கமுடியாத சம்பவங்கள் -தனியாகத் தான் நடத் தினோம் - சர்க்காரின் குண்டுகள் மட்டுமல்ல, ஏசலையும்