பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

108 தாங்கிக் கொண்டோம்; இரத்தம் பீறிட்டது; பிண மும் வீழ்ந்தது. எனக்குத் தெரிந்த அளவில் நமது சுயமரியாதை இயக்கக் காலத்திலிருந்து கவனத்தில் வைத்துச் சொல் கிறேன், நாம் நடத்திய கிளர்ச்சியை ஒடுக்க சர்க்கார் துப்பாக்கியின் துணையைத்தேடியதே, இரயில் நிறுத்தக் கிளர்ச்சியின் போதும், குன்றத்தூரில் தடை உத்தரவை மீறிய நேரத்திலும் தான்1 மதுரை கருப்புச் சட்டைப் படை மாநாட்டிலே துப் பாக்கிச் சத்தம் கேட்டது-அது நம்மை நோக்கி அல்ல, அக்ரமமாக நமது மகாநாட்டிலே தீ வைத்த காங்கிரஸ் காரரை நோக்கி. எனவே, திராவிட முன்னேற்றக் கழகமாக நாம் வடிவம் கொண்ட பிறகு, நாம் ஒரே குடும்பமாக இருந்த போது கண்டதைவிட, கடுமையும் கொடுமையும் மிகுந்த அடக்கு முறையைச் சந்தித்திருக்கிறோம். அதுபோலவே, அவர்கள் நடத்திய, இந்திஎழுத்து அழிப்புப் போரில் நாமும் ஈடுபட்டோம்-அதற்கான திட் டம் தீர்மான உருவில் நம்மிடம் ஏற்கனவே இருந்ததால். அதுபோலவே, அவர்கள் வடநாட்டுத் கடை மறியல் செய்தனர்! அதிலே துணிக் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினர்! கலந்து கொள்ளாதவர்கள் கல்லாவர், மண்ணாவர், கால்தூசு ஆவர். என்று சாபம் கொடுத்தனர். இனி, இதுகள் இருக்குமிடம் தெரியாது ஒழிந்து போகும் என்று எச்சரித்தனர். எனினும், நாம் அந்தக் கிளர்ச்சியில் கொள்ளவில்லை -மடிந்துபடவில்லை!! கலந்து அதுபோலவே, பிள்ளையார் உடைப்பு! நாம் அதிலே ஈடுபட்டோமில்லை! இனி இதுகள் செல்லாக் காசுகள் என்று அவர்கள் ஆருடம் சொல்லாமலில்லை! எனினும், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தப் போக்கினால், வளர்ச்சி குன்றிப்போனதாக, அவர்களே கூறமுடியாது. (15)இவர்கள் கொடி கொளுத்தும் கிளர்ச்சியில் ஈடுபடா விட்டால் என்ன, நாங்கள் அதிலே வெற்றி காண்போம் - கண்டு வெட்கப்படட்டும் என்று பேசுகிறார்களாமே! பேசட்டுமே, அதனால் என்ன நம்மைக்கலந்து வகுக் கப்பட்ட திட்டமல்ல அது; அதை நடத்தும் முழுப்