பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

109 பொறுப்பும் அவர்களைச் சார்ந்தது; அதிலே வெற்றி கிடைத்து, கீர்த்தி கிடைத்தால், நமக்கு நிச்சயமாகப் பங்கு வேண்டாம்; அவர்களே அதற்கு உரியவர்கள் என்று நாமே கூறிவிடுவோம்-அவர்கள் களத்திலே, எல்லாத்திசைகளிலும் பாய்ந்து முன்னேறிவெற்றி பெறு கிறார்கள். அவர்கள் பெறும்வெற்றி எத்தகையது என்றால் இனிவேறு யாருக்கும் எந்தவகையான வேலையும் இல்லை என்று சொல்லத்தக்க வகையான முழுவெற்றி என்றே வைத்துக் கொள்வோம், அதனால் என்ன, நஷ்டம்; நமக் கென்ன கஷ்டம்? நந்தவனத்துக்கு நாள் பூராவும் நீர் பாய்ச்ச வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, கிணற்றடி போகிறான் - பெரு மழைபெய்தால்,என்ன கஷ்டகாலம்! நாம் நீர் பாய்ச்ச முடியாமல் போய்விட்டதே என்றா ஆயாசப்படுவான்? நமக்கு வேலை இல்லை, மழை வந்தது நல்லதாயிற்று, மழையே வாழி! என்று வாழ்த்துவான்; வெறென்ன!! 0 0 0 தம்பி! இவைகள் தானே நீ கேட்க விரும்புவாய்-நீ கேட் பதாக வைத்துக்கொண்டு நானே பதிலும் எழுதிவிட்டேன். இது போதாது! நமது கழகப் பொதுச் செயலாளரின் கருத்து என்ன என்று கேட்பாய். பொதுச் செயலாளரும் துணைச் செயலாளரும் இதே கருத்தினைத்தான் என்னிடம் கூறினார்கள்; நான் உன்னிடம் கூறிவிட்டேன்; நீ, தம்பி! மற்றவர்களுக்குச் சொல்லிவிடு!! 24-7-1955 அன்பன், Jimm