பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

112 நமது நினைவெல்லாம் ஈர்த்திடக் தக்க வகையிலே, இரு கிழமைகளாக இங்கு புயலென வீசி வருவது பெரியாரின் ஆகஸ்டுக் கிளர்ச்சிதான். இந்தக் கிளர்ச்சி எந்த வகையில் உருவெடுக்கும் என்று கூறிடும் நிலை, மெல்லிய கோடுகளே தெரிவதால், இப்போ தைக்கு, (அதாவது நான் உனக்குக் கடிதம் தீட்டும் போது) இல்லை. உன் கருத்து இக்கடிதத்தில் பதியும் நேரத்தில், பெரி யாரின் கிளர்ச்சி, எந்தக் கட்டத்தை அடைகிறது என்பது தெரிந்து விடக்கூடும். தம்பி, இப்படி, போர்! போர்! என்ற முழக்கமும், போர் எப்படி எப்படி எல்லாம் இருக்கப்போகிறது தெரியுமா என்ற ஆர்வமூட்டும் அறிவிப்புகளும் கிளம்பி, உள்ளத்தை ஒரேயடியாகக் கிளர்ச்சி வயத்ததாக்கிவிட்டன. என் பெரியாரின் ஆகஸ்ட்டுப் போரில் நாம் கலக்கவில்லை என்றாலும், போர் பற்றிய முழக்கம் கிளம்பியுள்ள இந்த வேளை யில், என் மனமும் உன் மனமும்கூடத்தான், போராட்டங் களில் ஈடுபடும் வாய்ப்புகள் நமக்கெல்லாம் கிடைத்தபோது கண்ட அனுபவங்களைப் பற்றித்தானே எண்ணிடும்! இயற்கை அல்லவா!! நாம் திராவிடர் கழகமாக இருந்தபோதும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். முன்னேற்றக் கழகமாகி வெளிவந்தபோதும் போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். எனவே, எங்கும் போர்! போர்! என்று பரணி பாடப்படும் நேரத்தில், பழைய நாட் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக மனத்திரையிலே பளிச்சுப் பளிச்செனத் தோன்றத்தான் செய்கிறது. எனவே என் சிறை அனுபவங்களிலே சில உனக்குக்கூறு கிறேன் -- உன் சிறை அனுபவத்தை எனக்குக் கூறிடுவாய், என்ற நம்பிக்கையுடன். அபிதான சிந்தாமணி மாதம்! 'நாலுமாதம்' என்றார் மாஜிஸ்டிரேட்! நாலு என்று லேடி டாக்டர் கூறிடுவது கேட்டு மகிழும் ஆரணங்கு போலானேன். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி 1938-ஆச்சாரியார் ஆட்சிக் காலம் - என்மீது, குற்றம் புரியும்படி தூண்டிவிடுதல். உடந்தையாக இருத்தல் எனும் குற்றங்கள் - வழக்கு நடை பெற்று, அன்று சென்னை எழும்பூர் கோர்ட்டில், நாலுமாதம் என்று தீர்ப்பளிக்கப்பட்டதும், கொள்கைக்காகக் கஷ்ட நஷ்டம் ஏற்கும்உள்ளம் இவனுக்கு உண்டு என்று இயக்கமும் இயக்கத்தின் போக்கைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பொதுமக்களும் நல்ல தீர்ப்பு அளித்துவிட்டனர்-பரீட்சை C