பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

113 யில் தேறிவிட்டோம் என்றெண்ணினேன். விவரிக்க முடி. யாததோர் மகிழ்ச்சி- வெற்றி பெறுகிறோம் என்ற நம்பிக்கை. சென்னைச் சிறையில், பெரியாருடன் ஒரே வரிசைக் கட்டி டத்திலே தங்கியிருக்க நேரிட்டதை ஒரு வாய்ப்பாகவே கொண்டேன். குற்றாலத்துக்கோ, கொடைக்கானலுக்கோ செல்பவர் கள், உள்ளே நுழைந்ததும், தனக்கு வேண்டியவர்கள்- இருப்பது கண்டால், எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்- எனக்கு, உள்ளே நுழைந்ததும், வந்துவிட்டாயா? வா! வா1 ஆறா, எட்டா? நாலா, மூன்றா?" என்று கேட்ட டி நண்பர்கள் என்னிடம் அன்புடன் வந்தபோது, அதுபோன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. மகிழ்ச்சியைத் தொடர்ந்து அனுபவிக்க முடியவில்லை. காரணம் வீட்டைவிட்டு இந்தக் கூட்டுக்குள்ளே வந்துவிட் டோமே என்ற கவலையல்ல; போட்டுக்கொள்ளப் பொடி யில்லை! என்ன செய்வேன்? உனக்குத் தெரியுமே. தம்பி? நான் அந்தக்கெட்டபழக்கத்துக்கு ஆட்பட்டு அல்லற்படுவது; கடை வீதியா, சண்முகம் கொண்டுவா, அம்பாள் வாங்கிவா என்று சொல்ல? சிறை!! என் சங்கடத்தை அறிந்துகொண்ட அடிகள் ‘“இது தானே வேண்டியது! இதோ" என்று கூறி ஒரு சிறு காகிதப் பொட்டலம் கொடுத்தார் - பொடி!! நெடி குறைந்துபோன நிலை! பக்குவமாகத்தான் மடித்து வைத்திருந்தார்; ஆனால், காகிதத்தில் இருந்ததால் பொடிபதம் கெட்டுக் கிடந்தது- எனி னும் எனக்கிருந்த பசி, அசல் சண்முகம் இதனிடம் என்ன செய்யும் என்று களிப்புடன் கூறச் செய்தது. இந்தப் பொடிப் பொட்டலத்தை நான் என்றுமே மறப்பதற்கில்லை. முதல் சிறை அனுபவம் - மூக்குப் பொடிக்கே அலைய நேரிட்டது முதல் அனுபவமல்ல! நாலு மாதமும் நாங்கள் அங்கு, தமிழ்! தமிழ்! தமிழ்! என்ற உணர்ச்சி வயமாகி இருந்துவந்தோம், பெரியாருடன் பன்னிரண்டு மணி நேரம் (இரவில்தான் தனித்தனியாகப் போட்டுப் பூட்டிவிட்டார்களே) ஒன்றாக இருக்க, பேச,கேட்க பழக அருமையான வாய்ப்பு. இரசமான விருந்து சுவையுள்ள காலமாக அந்த நாலுமாதங்கள் இருந்தன. சிறை செல்கிறேன் என்பதறிந்த என் கெழுதகை நண்பர் புலவர் அருணகிரிநாதர், அங்கு நிரம்ப நேரம் கிடைக்கும், பல்வேறு விஷயங்களைப் படிக்க இது தூண்டுகோலாக இருக் கும் என்று கூறி, என்னிடம் அபிதான சிந்தாமணி எனும் புத்தகம் கொடுத்திருந்தார். அவர் உனக்கு அவ்வளதாகத் தெரிந்திருக்கக் காரணமில்லை, தம்பி, பொதுவாழ்வுத்