பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

115 இரவு நேரத்தில், எனக்கு விருந்து கிடைக்கும்-பக்கத்து அறையிலிருந்து, " காணக் கண் கோடி வேண்டும்”- என்று ஆரம்பிப்பார் ஓரடி பாட! பலே! பலே! ஒன்ஸ்மோர்! என்று நான் இந்தப் பக்கத்து அறையிலிருந்து கூவுவேன். "தூங்கவில்லையா இன்னும் - அடே அப்பா! நீ தூங்கி னால்தான் நான் பாட முடியும்; நான் பாடுவதைக் கேட்டு விட்டுக் காலையில் கேலி செய்ய நினைக்கிறாய் ---இடங் கொடேன்" என்பார். "அண்ணேன்! உண்மையாக நன்றா கவே இருக்கிறது. கொஞ்சம் ஆலாபனையும் நடக்கட்டும்" என்பேன் - அழகிரி அவர்களின் ஆலாபனமும் அருணசலக் கவிராயர் இயற்றிய கீர்த்தனையும் கிடைக்கும். இரண்டாம் முறையாகக் கண்ட சிறை அனுபவத்திலே எனக்குக் கிடைத்த இந்த ஆலாபனத்தையும், நான் எப்போதும் மறந் திட முடியாது. எப்படி முடியும்? எவ்வளவு சுவை என் கிறீர்கள் - நித்த நித்தம்! அலாதியானதோர் வகையான சுவை கிடைத்தது மூன் றாம் முறை சென்றபோது-இதுவும் சில நாட்கள்தான்- இந்தச் சுவை, ஆறு பிஸ்கட்டுகளால் கிடைத்தது, அதைக் கேட்கிறாயா தம்பி, கூறுகிறேன். ஆறு பிஸ்க்கட்டுகள் "ஆறு நூறு அபராதம், கட்டத் தவறினால் நாலு மாத சிறைவாசம்" என்று தீர்மானிக்கப்பட்டது: அபராதம் செலுத்தவில்லை, சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன், திருச்சியில் ; எனக்குக் கிடைத்த வாய்ப்பு எப்படிப்பட்டது தெரியுமா தம்பி, பெரியாரும் அதே நாளில், அதேவிதமான தண்டனை பெற்று, அதே சிறைக்கு வந்தார், இருவரையும் ஒரே போலீஸ்வானில்தான் ஏற்றிச் சென்றார்கள். திராவிடர் கழகமாக இருந்தபோது இப்படித்தானே நடந் திருக்கும், இதிலே என்ன ஆச்சரியம் என்று சொல்லுவாய். தம்பி! இது. திராவிட முன்னேற்றக் கழகமாக நீயும் நானும் மாறின பிறகு, நடைபெற்ற நிகழ்ச்சி - 1949 இல். "ஆரிய மாயை' எனும் ஏடு தீட்டியதற்காக சிறை. சிறை. எனக்குச் "பொன்மொழிகள் " தீட்டியதற்காகப் பெரியாருக்குச் திருச்சி கோட்டாருக்கு இப்படி ஒரு காட்சியைக் காண வேண்டுமென்று ஆசைபோலும். இரண்டு தனித்தனி வழக்கு கள்; தனித்தனியாகத்தான் விசாரனைகள்; எனினும் 'தீர்ப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது.