பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

116 பிரிந்து நெடுந்தூரம் வந்துவிட்ட என்னை, அன்று அந்தக் கோர்ட்டில், பெரியாருக்குப் பக்கத்திலே நிற்கச் செய்து, வேடிக்கைப் பார்த்தது வழக்கு மன்றம். போலீஸ் அதிகாரி கள் அதை தொடர்ந்து, ஒரே வானில் ஏற்றிச் சென்றனர்; அதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையிலே இருந்த அதிகாரி, பெரியார் கொண்டுவந்திருந்த சாமான்களைக் கணக் குப்பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று கூறும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சம்பவம்; எனக்கு உள்ளூரப் பயந்தான்! கேள்விக்கணையுடன் நிறுத்திக்கொள்ளாமல், அன்புக் கணையையும் ஏவினால், என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும் என்றெல்லாம் அச்சப்பட்டேன். ஆனால் இடை யிடையே ஒரு தைரியம் எனக்கு; பெரியார் அவ்வித மெல்லாம் எண்ண மாட்டார் - அவர் மனதில் அந்த அளவுக்கு விரோதத்தை வடித்தெடுத்துப் பாய்ச்சிவிட்டிருக்கிறார், அந்த வித்தையிலே விற்பன்னர்; எனவே பயமில்லை என்றிருந் தேன். சிறிது கூர்ந்து பேசிக் பக்கத்துப் பக்கத்து அறை; பகலெல்லாம் திறந்து தான் இருக்கும்; பலர் வருவார்கள், இங்கு நேரம், அங்கு சிறிது நேரம். இன்னும் சிலர் கவனித்தபடி இருப்பார்கள், நாங்கள் இருவரும் கொள்கிறாமோ என்று: அவர் அறைக்கு உள்ளே கும்போது நான் வெளியே மரத்தடியில்! அவர் வெளியேவர முயற்சிக்கிறார் என்று தெரிந்ததும் நான் அறைக்கு உள்ளே சென்றுவிடுவேன். இப்படிப் பத்து நாட்கள்!! இருக் நாளைய தினம் எங்களை விடுவிக்கிறார்கள்-முன் தினம் நடுப்பகலுக்கு மேல், ஒரு உருசிகரமான சம்பவம் நடை பெற்றது. பெரியாருக்கு வேலைகள் செய்துவந்த கைதி என் அறைக் குள் நுழைந்து, "ஐயா! தரச்சொன்னார்" என்று சொல்லி கையில் என்னிடம் ஆறு பிஸ்க்கட்டுக்ள் கொடுத்தான். வாங்கியதும், என் நினைவு பல ஆண்டுகள் அவருடன் இருந்த போது கண்ட காட்சிகளின்மீது சென்றது. மறுநாளே திடீரென்று 'விடுதலை' கிடைத்தது. அந்த வேடிக்கையையும் கேள் தம்பி. எங்களை விடுதலை செய்யப்போகிறார்கள் என்ற செய்தி, உள்ளே எங்களுக்குத் தெரிவதற்கு முன்பே, வெளியே தெரிந்துவிட்டிருக்கிறது. எனவே, எங்களை அழைத்துச்