பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

118 என்னைக் காண நண்பர் சிலர் வந்தனர் - அதே சமயத் தில் தோழர் குருசாமி அவர்களைக்காண தோழியர் குஞ்சித மும், ரஷியாவும் (விரைவில் டாக்டர்!) வந்திருந்தனர். சந் தித்தோம் - கம்பிகள் இடையில்/கம்பிகள் மட்டுமா, அமைப் புகளே வேறுவேறு ஆகிவிட்ட நிலைமை. தோழியர் குஞ்சிதம் அவர்கள் நாலு சாக்லெட்டைத் தந்தார்கள்! அதைவிடச் சுவையுள்ள உணவு எனக்கு அவர்கள் இல்லத்தில் பலமுறை கிடைத்தது உண்டு. ஆனால், அந்த நாலு சாக்லெட்டுக்கு உள்ள சுவையே அலாதியான தல்லவா. ஐயாயிரவர் தம்பி ! எனக்கு ஏற்பட்டது போன்ற பல்வேறு வகை யான சுவையுள்ள சிறை நினைவுகளை இப்போது பெறக் கூடி. யவர்கள் ஐயாயிரம் தோழர்கள் உள்ளனர், நமது கழகத்தில். அவர்கள் இன்று ஒரு அமைப்பைக் கட்டிக்காக்கும் பெரும் பொறுப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். தத்தமது தனி உணர்ச்சி கள், அமைப்பின் தரத்தையும் தன்மானத்தையும் உயர்த்து வதாக இருத்தல் வேண்டும் என்ற நேர்மையுணர்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்களின் அனுபவம், சாதாரணமான தல்ல; நடாத்திய அறப்போரும் சாமான்யமானதல்ல. நாம் அடக்குமுறைகண்டு அஞ்சுபவர்களா, அதனை எதிர்கொண்டு மார்பில் ஏற்றுக் கொண்டவர்களா என்பதை பெற்றுள்ள தியாகத் தழும்புகள் நமக்கெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன - பிறர் தரும் தீர்ப்புத் தேவையில்லை - நாம் பட்ட தடியடியும், சிறைவாசக் கொடுமையும், நினைவிலே எப்போதும் இருக்கிறது. ஒரு பெரும் போராட்டத்தை நடத்திடத் தக்க அமைப்பு முறையும் ஆற்றலும் நமக்கு உண்டா? நாம் இப்போதுதானே பிரிந்து வந்து புதுப்பாசறை அமைத்திருக்கிறோம், என்ற அச்சமும் சந்தேகமும் எனக்கு இருந்தது- அதிலும் எங்கள் ஐவரை முதலிலேயே கூண்டுக்குள்ளே தள்ளி மூடிவிட்ட பிறகு, என் சந்தேகம் அதிகமாகிவிட்டது. "சம்பத்து ! சரியாக நடக்குமா...?" என்று கேட்பேன் ஆயாசத்துடன். "நீங்கள் உள்ளேவந்துவிட்ட பிறகு, கிளர்ச்சி நடப்பதற் குத் தங்கு தடை ஏது, ஜோராக நடக்கும்" என்பான் குறும்புடன். ""ஒரு ஐந்நூறு பேர் சிறைப்படுவார்களா? - " என்று கேட் பேன் தைரியத்தோடல்ல.