பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

119 "ஐந்து நூறா...... இருக்கும்......ஆயிரம்கூட இருக்கலாம்" என்று உற்சாகத்தை மெள்ளமெள்ள வரவழைத்துக் கொண்டு பேசுவார் நெடுஞ்செழியன். பத்திரிகைகளைப் பிரித்தோம், ஏ! அப்பா! நாம் சம்பந்தப் பட்ட இயக்கமா இது - என்று நான் ஆச்சரியப்பட்டேன்- பத்திபத்தியாக-பக்கம் பக்கமாக-கிளர்ச்சிச் செய்திகள் நூறு, ஐந்நூறு, ஆயிரம், இரண்டு, மூன்று என்று வளரு கிறது ஐயாயிரம் என்று சொல்லத் தக்க அளவிலே வளர்ந் தது. தடியடிபட்டோர், துப்பாக்கிக் குண்டடிபட்டோர், என்ற வகையில் செய்திகள் உருவெடுத்தன. தமிழகம் மட்டுமல்லாமல், இந்திய பூமாகம் முழுவதிலுமே, இந்தக் கிளர்ச்சி பற்றிய பரபரப்பான செய்தியைத்தான் கவனித் தன. அமெரிக்க நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் 'செய்தி' வெளிவந்தது என்றால், பார்த்துக்கொள் தம்பி, கிளர்ச்சி எந்த அளவு வலுத்து இருந்தது என்று. தம்பி ! எந்தப் போராட்டத்தையுமே தங்கள் போராட் டத்துக்குச் சமமாகாது என்று எண்ணி, ஏளனம் பேசுவதும், தாங்கள் துவக்கும் போராட்டத்திலே தான் மற்றவர்கள் வலிய வலிய வந்து சேரவேண்டுமே தவிர, பிறர் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வதோ, அது முடியாது என்றால் இன்முகம் காட்டுவதோகூடத் தேவையில்லை, என்றும் பேசுபவர்களல்லவா, கம்யூனிஸ்டுகள். அந்த அதி தீவிரக் கட்சியின் தலைவர்களிலே இருவர், M.L A-க்கள். மணலி கந்தசாமியும், ஈரோடு கே.டி. ராஜு அவர்களும் சிறையில் என்னைச் சந்தித்து, வெளியே நடைபெறும் நமது போராட்டம் பற்றித் தங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை, பாராட்டு தல் ஆகியவைகளைத் தெரிவித்துச் சென்றனர் என்றால், கிளர்ச்சியின் தன்மை எப்படி இருந்திருக்க வேண்டும் என்ப தைத் தெரிந்து கொள்ளலாம். 31-7-1955. அன்புள்ள, Jimmynz