பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

கடிதம்: 13. தம்பி, அளவுகோல் எது? பெரியாரின் கொடி எரிப்புப் போராட்டம் - பெரியார் தன்மைகள். நாடு பெருங் கொந்தளிப்பில் சிக்கிவிடும், திராவிடர் வீடு களில் இளைஞர் பலர் துப்பாக்கிக்கும் தடியடிக்கும் இலக்காகி இம்சிக்கப்பட்டது பற்றியும், சிறையில் போட்டு அடைக்கப் பட்டனர் என்பது குறித்தும் பேசிடும் காட்சிகள் இருக்கும், கலாம் செய்வோருக்கும் குழப்பம் விளைவிப்போருக்கும் நல்ல வேட்டையாடும் வாய்ப்பு ஏற்படும். சச்சரவுகள்,சமர்,சந்து முனை அடிதடிகள், உருட்டுக் கண்ணினர் மிரட்டும் குர ரலினர் ஆகியோருக்கெல்லாம் நிரம்ப வேலை கிடைத்து வேண்டத் தகாத நிகழ்ச்சிகள் பல நெளியும் என்றெல்லாம் நீயும் நானும் அச்சப்பட்டுக் கொண்டிருந்தோம், சென்ற கிழமை பெரியார் சிறைப்படுவதுடன், அவர்மீது பயங்கரமானது என்று கருதப்படும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு நடைபெறும், என்று அஞ்சினோம். டில்லிமந்திரி பந்த் மிரட்டிய போதும் சரி, பெரியார் தமது போர் பற்றிய விளக்கமளிக்கையில் 300 பேர் சாக வேண்டி நேரிடலாம், 1000 பேர் காயப்படவேண்டி நேரிடக் கூடும், ஒரு பத்தாயிரம் பேர் சிறை செல்லவேண்டி ஏற்படக்கூடும் என்று கூறினார் -அதனைக் கேட்டபோதும் உண்மையிலேயே நான் பதறிப் போனேன். எப்படியோ ஒன்று நமக்கெல்லாம் நிம்மதியும் நாட்டுக்கு அமைதியும் கிடைத்திடத்தக்க விதமாக நிலைமைஉருவெடுத் தது - மகிழ்கிறேன், தம்பி, உண்மையிலேயே பூரிப்படை கிறேன். அதிர்ச்சி தரும் அமளிகள், மயிர்க் கூக்செறியத்தக்க கிளர்ச்சிகள், மூக்கின்மீது விரல்வைத்து ஆச்சரியப்படத் தக்கதான போராட்டங்கள் ஆகியவைகளின் மூலமாகப்பெறக் கூடிய புதுவலுவைவிட, நாட்டு மக்களிடம், குறிப்பாக இன்ன மும் காங்கிரசிலுள்ள திராவிட மக்களிடம் கொள்கையைப் புகுத்துவதிலே பெறுகிற வெற்றியையே நான் பெரிதும்