பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

122 சமுதாயத்துக்கு, ஏற்றதான ஓர் திட்டமல்லவா தீட்டவேண் டும், தாங்கிக் கொள்ள வேண்டுமே, தம்பி 1 ஒரு படைத் தலைவரின் ஆற்றலும் அஞ்சாமையும், இடுக் கண் கண்டு கலங்காத போக்கும், ஒரு படையிலுள்ள கோழை களையும் வீரர்களாக்கிவிடும் வரலாறு அத்தகைய சம்பவங் கள் பலவற்றைக் காட்டுகிறது- ஆனால், தம்பி, உற்றுக் கவ னித்தால் உனக்கு உண்மை விளங்கும்-இவைகள் சிம்பவங் கள்! அவ்வளவுதான்! போர் முறை என்பது இந்தச் 'சம்பவங்களை இலக்கண மாகக் கொள்வது அல்ல. எதிரே ஒரு பெரிய படை, தம்பி, எல்லாப் போர்க்கருவி களுடனும், இந்தப்புறம் ஒரு சிறு படை, பழுதான படைக் கலங்களுடன். ஒரு சிறு கணவாய்தான இடையில். அதைக் கடந்து அப்பெரும்படை வந்துவிட்டால் இந்தப் படை சின்னா பின்னமாகிவிடும் - என்று வைத்துக் கொள்- தம்பி, நீயும நானும் அந்தச் சிறிய, ஆனால் சீரிய படையில் இருப்பதாக எண்ணிக்கொள் - நமது படைத்தலைவர் அந்தச் சமயத்தில், அபாரமான வீரதீரம் காட்டி, கணவாயைக் கடந்து, பெரும் படையினைத் துளைத்துக்கொண்டு செல்ல ஆயத்தமாகி வருக! என்று உத்தரவிட்டு முன்னேறுகிறார், என்றால், பெரியபடை கண்டு பீதி கொள்ளத் தக்க வகையில், சிறிய படை தழலெனப் பாயும், கணவாய் இரத்த ஆறாக மாறும். உலக வரலாற்றிலே வீரத்துக்கு ஓர் ஒப்பற்ற சம்பவம் பொறிக்கப்பட்டு விடும். இதைத்தான் நான் சம்பவம் என்கிறேன். இத்தகைய சம்பவம் பற்றிப் படிக்குந்தோறும் படிக்கப் பக்கம் நின்று கேட்குந்தோறும்,வீரம் வீறிட்டெழச் செய்கிறது.என்றாலும், தம்பி, சிறிய படை கணவாயில் பாய்ந்து சென்று பெரிய படையைத் தாக்கி வெற்றி தேடுவதுதான், போர் முறை என்று இலக்கணம் அமைத்துக் கொள்ளமாட்டார்கள். போர்க்களத்து எடுத்துக்காட்டினைக் கூறினால், என்னமோ போல இருப்பதானால், தம்பி, இதோ இந்த உதாரணத்தை வேண்டுமானால், கேள். கட்டுக் காவலில் உள்ள கட்டழகி, மாடியில். அவளைக் காதலிக்கும் ஆணழகன், பக்கத்துத் தோட்டம். புறத்தில். கண்ணும் கண்ணும் பேசிவிட்டது - பெற்றோர் பேயராகி விட்டனர் - நெஞ்சைத் தொட்டிடும் காதற் கடிதம் தீட்டி யிருக்கிறான் அந்த நேரிழையாளுக்கு; அதை நேரிடையாகத் தரமுடியாது ; எனவே, அதனைச் சிறு கல்லில் சேர்த்துக் கட்டி