பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

126 ஏற்றதத்தனையும் தமக்கும் உடன்பாடே என்று சொல்வது தான், தாங்களும் பெரியார் அளவுக்கு வளர்ந்து விட்டதாகக் காட்டிக் கொள்வதற்கான வழி என்று கருதுபவர்களாகவும் உள்ளவர்கள்தான். அவர் கூறும் திட்டத்தை அப்படியே ஒப்புக்கொண்டு - அதற்காகச் 'சபாஷ் பட்டம் பெறுகிறார்கள். பெரியாரின் நிலை வேறு! இயக்கத்தின் நிலை வேறு? பெரியாரால் தாங்கிக்கொள்ளக் கூடியதை எல்லாம் இயக்கமும் தாங்கிக்கொள்ள முடியும் என்பது தப்புக் கணக்கு. பெரியாருக்கு உள்ள தன்மையையும் திறமையும், இயக் கத்தில் உள்ள தங்கள் ஒவ்வொருவருக்கும் அதே அளவிலும் வகையிலும் இருக்கிறது என்றுஎண்ணிக்கொள்வது, அவரைப் பூரணமாக அறியாததால் ஏற்படும் தவறு; தங்களைப்பற்றி மிகைப்படுத்திக் கணக்குப் போடுவதால் ஏற்படும் தவறு மாகும். தம்பி! அண்ணன் தம்பி இருவர் - அண்ணன் ஊர்ப் பெரிய தனக்காரன் - எங்கும் கலியாணம் கார்த்தி என்றதும், பஞ்சாயத்து பாகப்பிரிவினை என்றதும், அண்ணன்தான் செல்வான்- அமளி அடங்கும், ஊர் சீர்ப்படும். தம்பி, ஏருண்டு தானுண்டு என்று இருப்பவன். தம்பி, அண்ணன் தனக்கேற்றது செய்கிறான், நாம் நமக்கு ஏற்றது செய்கிறோம் என்றுதான் 'தலையணை மந்திரம்' ஏறுகிற வரையில் எண்ணிக் கொண்டிருந்தான். அது தலைக்கேறியதும் 'ஏன்! நீ மட்டும் தான் ஊர்ப் பெரிய தனம் பார்க்க வேண்டுமா-நான் என்ன நம்ம குடும்பத்து உழவு மாடா?" என்று அண்ணனிடம் வம்புக்கு நின்றான். அண்ணன் சூக்ஷமம் தெரிந்து கொண்டான்-"தம்பி! நீயே இனி, ஊர்ப் பெரிய தனக்காரர் வேலையைப் பார் நான் காடு கழனியைக் கவனித்துக் கொள்கிறேன் - எதற்கும் இரண்டோர் நாள் என்னோடு வா? ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நான் எப்படி எப்படிக் கவனிக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள் வாய்" என்று கூறி அழைத்துச் சென்றான். அன்று ஒரு சாவு-மகன் கோவெனக் கதறி அழுகிறான், தாய் இறந்ததற்காக. ஊர்ப் பெரிய தனக்காரனான அண்ணன், அவனைத் தேற்றி, 'என்னப்பா செய்யலாம்! எவ்வளவு அருமையான குணம், அம்மாவுக்கு எங்களிடமெல்லாம் எவ்வளவு அன்பு தெரியுமா? அதிகம் சொல்வானேன், அவர்கள் உனக்குத் தாய் அல்ல, எனக்கும் தாயாராகத்தான் இருந்தார்கள்" என்றான்,