பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

127 தம்பி, கேட்டுக்கொண்டான்-பூ! பூ! இவ்வளவுதானா, பெரிய தனக்காரன் வேலை -- என்று எண்ணினான்-மறுநாளே பட்டத்துக்கு வந்துவிட்டான். எட்டாம் நாள் வேறோரிடத்தில் ஒரு இழவு. 4/2 மனைவியைப் பறிகொடுத்த கணவன், மண்ணில் புரண்டு அழுகிறான் "ஐயோ! அவள் போனபிறகு நான் எப்படிவாழ் வேன் - எனக்கேன் சாவுவரக்கூடாது! என்ஆசைக்கனியே! அமுத நிலவே" என்றெல்லாம் கூறிக் கதறுகிறான். பெரிய தனக்காரனான தம்பி. அருகே சென்றான். அவனை அணைத்துப் பிடித்தபடி, "அழாதே அப்பா! அழாதே! என்ன செய்ய லாம்! எவ்வளவு நல்லவர்கள், எவ்வளவு அன்பு! அதிகம் சொல்வானேன், அவர்கள் உனக்கு மட்டுமா மனைவியாக இருந்தார்கள், எனக்கும்தான்” என்றான். சாவு வீடு, படுகளமாகிவிட்டது. "அண்ணா அண்ணா! எனக்கு வேண்டவே வேண்டாம். இந்தப் பெரியதனக்கார வேலை" என்று சொன்னான் தம்பி. கதைதான்- ஆனால் தம்பி! பெரியார் தனது ஆற்றலுக் குத் தகுந்ததைச் செய்யும்போது,அதை நானும் செய்வேன், என்னால் முடியும் என்று சொல்லிக் கிளம்புவது, சரியாகாது என்பதற்கான பாடம் இந்தக் கதையில் இருக்கிறது. இயக்கம் உள்ள நிலையையும், அதன் எதிர்காலவளர்ச்சி யையும் கருத்தில் கொண்டுதான் நான் ஆகஸ்ட்டை விரும்ப வில்லை, பெரியாரைச் சரியாக மதிப்பிடாததால் அல்ல, மிக மிகச் சரியாக மதிபபிட்டதால் தான். எனவே, ஒரு இயக்கம் நடத்தத் திட்டமிடும் கிளர்ச்சி, அதன் தலைவரின் தனிப்பெருந் தன்மையை மட்டும் அளவு கோலாகக் கொண்டு அமைதல் கூடாது, அந்த இயக்கத்தின் இன்றைய நிலைக்கு ஏற்றதாகவும், எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்காததாகவும் இருக்க வேண்டும் என்கிறேன். நன்றாக எண்ணிப்பார். தம்பி ! நன்றாக--ஒரு முறைக்கு இருமுறை படித்து விட்டு. 7-8-1955 அன்புள்ள, Jimmy na