பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

129 நாம் பெற்ற தியாகத் தழும்புகளுக்கு முடியுமானால், அவை இடி இடியெனச்சிரித்து, அவர்களைப் பார்த்து ஏளனம் செய்யும்?! தம்பி, காங்கிரஸ்காரர்கள் தண்டவாளப் பெயர்ப்பு, தபாலாபீஸ் கொளுத்துதல் போன்ற முறையில் ஆகஸ்ட்டுப் போராட்டம் நடத்தினர் 1942 இல்! நாம் கலந்து கொள்ள வில்லை.நாம் என்றால் தம்பி,நானும், நீயும் மட்டுமல்ல-தி.க. தி.மு.க. என்றுள்ள இரண்டும் ஒன்றாக இருந்ததே, அந்தக் குடும்பம் பூராவும். நாம் பயங்கொள்ளிகள், அடக்குமுறை குப் பயந்து ஓடிவிட்டோம், என்றா பொருள்! அந்த முறை கள் சரியல்ல என்று மனதாற நம்பினோம்- வீணான கலகம் கலவரம் குழப்பம் பொருட் சேதம், இவைதான் மிச்சம் என்று எண்ணினோம். எனவே ஒதுங்கி நின்றோம். அதுபோலத் தான் இப்போது, கொடி கொளுத்தும் காரியத்தில் தி.மு.க. கலந்து கொள்ளவில்லை-இது கோழைத்தனம் என்று கூறு வது எந்த வகையில் பொருந்தும். வேண்டுமானால், தமிழ் நாட்டு அரசியலில் இது வாடிக்கை ஒருவர் மற்றவருடைய கருத்தை அறியும் அளவுக்குக்கூட பாசம் நேசம் கொள்ளாமல் ஒரு திட்டம் தீட்டிவிட்டு, அதன் காரணமாக அதிலே கலந்துகொள்ள மறுப்பவர்களைக் கோழைகள் என்று ஏசுவது தமிழகத்தின் வாடிக்கை, என்று கொள்ளவேண்டியதுதான்! தங்கள் ஆகஸ்டில் சேராததற் காகக் காங்கிரஸ்காரர்கள் திராவிடரைக் கோழைகள் என்று ஏசினர்! இப்போது. நடைபெறும் கிளர்ச்சிகளில் கொடி கொளுத்துவதில் மட்டுமல்ல, எந்தப் போராட்டத்திலாயினும் சரி, நாம் சேராமலிருந்தால், கோழைகள் என்று ஏசுகிறார் கள்! இது பொருளுள்ளது என்று கருத முடியுமா? நீண்ட காலமாக இருந்துவரும் வாடிக்கை - பழக்கம் என்று தான் கொள்ளவேண்டும். நாக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. நாம் கூடிக் கலந்து பேசிச் சில பல கிளர்ச்சிகள் நடத்தியுமிருக்கிறோம். இனியும் நடத்துவதற்கான முயற்சி இருந்துவருகிறது. இதை எல்லாம் கவனிக்காமல், அவரவர்கள் துவக்கும் கிளர்ச்சி களில் நாம் கலந்துகொள்ள வேண்டுமென்று கூறுவதும், கலந்து கொள்ளாதபோது கண்டிப்பதும், ஏன் என்று யோசித்த துண்டா தம்பி! நாம், அவ்வளவு அருமையாகப் பணியாற்ற கூடிய பக்குவம், பயிற்சி, திறம் படைத்தவர்கள் என்ற எண்ணம், எல்லா முகாமிலும் இருக்கிறது - எனவே எல்லோர் கண்ணும் நம்மீது விழுகிறது என்று பொருள்! ஆமாம், தம்பி, எவ்வளவு கடுமையான கிளர்ச்சிக்கும் ஈடு கொடுக்கக் கூடியவர்கள் என்பதை மும்முனைப் போர்