பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

133 அவன் வாயிலும் மூக்கிலும் இரத்தம் கக்கி இறந்துபடுவான் பாருங்கள் என்று கூறிவிட்டு, கூலியை வாங்கி முடிபோட்டுக் கொண்டு சாராயத்தை வெறி ஏறும் அளவுக்குக குடித்துவிட் டுப் போகும் கதைபோல, இதோ ஏழு கட்டுரை, மூன்று பிரசங்கம் இவைகளாலேயே ஒழித்துக் கட்டிவிடுகிறேன் பாரும் என்று பெரியாரிடம் பேசி, அவரை நம்பச் சொல் கிறார்கள். ஒவ்வோர் ஊரிலும் உள்ள முக்கியஸ்தர்களின் பெயரைக் கூறி, 'அவர் நமது கழகம் - தங்களிடம் நிரம்பப் பக்தி வெளிப்படையாக வரமாட்டார், ஆனால் மனதுக்குள்ளே நிரம்பக் கொள்கைப் பற்று-நெற்றியிலே குங்குமப் பொட்டு இருக்கும், ஆனால், குடி அரசு படிக்காவிட்டால் தூக்கம் வராது - 3 என்று பெரியாரிடமும் புளுகி வைக்கிறார்கள். அந்த ஊரில், எவ்வளவு பேர் இருக்கிறார்கள்-அந்தப் பயல்களுக்கு?-என்று பெரியார் கேட்கிறார். உடனே அவர் களுக்கு ஒரு ஆள்கூடக் கிடையாது என்று கூறிவைக் கிறார்கள். வடநாட்டுக் கடைகளை மறியல் செய்வோம் - அவர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள், உடனே, வடநாட்டுக் கடைக் கார்னை விட்டுவிட்டு, அவர்கள்மீது பாய்வோம், ஒழித்துக் கட்டிவிடலாம், 9 கட்டுரை போதும் என்று கூறுகிறார்கள். 9 9 கட்டுரைகள் தீட்டுகிறார்கள், ஒழிவதாகக் காணோம் ஓய்ந்தால் தேய்ந்தோம் என்ற அச்சத்தில் மேலும் சில கட்டு ரைகள் தீட்டி, அவர்களை ஒழிக்கப் பயன்படாவிட்டாலும், நமக்கு எழுதும் பழக்கம் வளரட்டும் என்ற அளவில் தருப்தி அடைந்து, இவ்வளவு எழுதும எனக்கு இன்னும் ஓர் இருபது என்று பெரியாரிடம் சென்று இளிக்கிறார்கள். இவைகளைப் பெரியார் அறியாமலில்லை! ஆனால் என்ன செய்வது? ஆலையில்லா ஊரில் இலுப் மைப பூ, சர்க்கரை என்பார்களே! அதுதான்! தெரிகிறதா, தம்பி!! 14-8-1955 அன்புள்ள, Jimmy Nz