பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

138 தேசியம் பேசி, நம்மிடம் பகை காட்டும் காங்கிரஸ் நண்பர் களையும், இதைப்பார்த்து, சிந்தித்து, கருத்தளிக்கச் சொல். சோடே பூர்க் கண்ணாடித் தொழிற்சாலைக்கு 21-இலட்ச ரூபாய் தந்திருக்கிறார்கள் - பல தவணைகளில். 21 இலட்சத்தையும் வாங்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட் டான பிறகு, துளியும் அச்சமின்றி, யார் நம்மை என்ன செய்ய முடியும் என்ற துணிவுடன், அந்தத் தொழிற்சாலையைக் குன்றவைத்து, அதற்குப் போட்டியாக இருந்த வேறோர் கண்ணாடித் தொழிற்சாலைக்கு,மிகக் குறைந்த விலைக்கு விற்று விட்டார்கள்! அக்ரமத்தின் தன்மை தெரிகிறதா? பசுவுக்குப் பருத்தியும் புல்லும் வைக்கப் பணம் தருகிறான் ஒரு தர்மதாதா! பசுவுக்கு அது தரப்பட்டால், மதுரமான பால் கிடைக் கும் என்று எண்ணுகிறான் உதவி அளித்தவன். அதற்காகத்தான் உதவி. 'நல்ல தரமான பசு; நல்லபடி தீனி வைத்தால், கொழுத்து வளரும், தீஞ் சுவைப்பால் அளிக்கும், அதற்காகச் செலவிடப் பணம் எங்களிடம் இல்லை,” என்று கூறித்தான் 'தர்மம்' கேட்டுப் பெற்றனர். பசுவோ, எலும்புந்தோலுமாகி விடுகிறது. பிறகு அதனை, 'கசாப்பு' கடைக்காரருக்கு மலிவான விலைக்கு விற்று விடுகிறார்கள். ' எத்தன்! கடின சித்தன்! பொது மக்கள் துரோகி என் றெல்லாம், நீ கண்டிக்கத் துடிப்பாய். தம்பி, நீயும் நானும் என்ன, டில்லி சட்டசபையில், சுசேதா கிருபளானி சோதிராம் தவானி தாகூர்தாஸ் பார்க்கவா மேரகன்லால் சாக்சேனா துளசிதாஸ் கிசன்சந்து எச்.வி.காமத் எஸ். என். தாஸ் டி. என். சிங் இப்படிப்பட்டவர்கள் இடித்துரைத்தார்கள். இவ்வளவுக்கும் குகா எனும் மந்திரி, அமைதியாக ‘அது சரி? என்ன செய்யலாம்! அவ்வளவு மோசம் இல்லை! ஊழல் ஏற்பட்டு விட்டது! கவனக்குறைவால் வந்த கேடு! அதைப் பெரிதுபடுத்தாதீர்கள்! போனது போகட்டும்!"- என்று இந்த முறையில்தான் பேசியிருக்கிறார்.