பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

139 ஜன நாயகம், தக்கமுறையில் தழைத்து, ஒரு பலம் பொருந்திய எதிர்க்கட்சி இருந்திருக்குமானால், குகாவும் அவரு டைய கூட்டுத் தோழர்களும், வெட்கித் தலைகுனிவது மட்டு மல்ல, மிரண்டு பணிந்திருப்பார்கள். ஆனால், இப்போது தான் எல்லாம் காங்கிரஸ்மயம்; காங் கிரசுக்கோ நேரு அபயம், என்று நிலைமை இருக்கிறதே! கண்டிக்கிறார்கள் ! புள்ளி விவரம் காட்டுகிறார்கள்! பசுவோ சாகடிக்கப்பட்டு விட்டது! பாபிகளா இப்படி யும் அக்ரமம் செய்யலாமா? யார் இந்தத் தீய காரியம் செய் தவர்கள்? பிடித்திழுத்து வாருங்கள் விசாரணை செய்து தண்டிப்போம், என்று பேசுகிறார்கள். ஆனால் அந்த ஆசாமியோ, சர்க்காரிடம் சன்மானம், விருது, சான்று பெற்று, வேறு இடம் தேடிச்சென்றிருக் கிறார். பொறுப்பற்றவர்கள், பொது மக்களிடம் துளியும் அச்ச மில்லாதவர்கள், தட்டிக்கேட்க யார் இருக்கிறார்கள் என்று எண்ணும் நெஞ்சழுத்தக்காரர்கள், என்றெல்லாம் சொல்லும் போது, கோபம்கொதித்தெழுகிறது காங்கிரஸ்கட்சியினருக்கு. ஆனால் சோடேபூர் சம்பவத்துக்கு அவர்கள் என்ன சமாதா னம் கூறுகிறார்கள்? இலட்சக் கணக்கில் கோடிக் கணக்கில் பணம் பாழா கிறது. பகற் கொள்ளைக்காரனாவது, போலீஸ் தாக்குமோ, ஊரார் ஒன்று திரண்டு வந்து எதிர்ப்பரோ என்று அஞ்சி அஞ்சிக் காரியம் செய்ய வேண்டி இருக்கிறது. ஏமாளித்தனம் அரச பீடத்தில் இருப்பது கண்டு, எத்தர்கள், ஒரு சிரமழ மின்றி, துளியும் நடுக்கமின்றி, அடிக்கிறார்கள் கொள்ளை. ஆகுமா? என்று கேட்டாலோ, "இதோ ஆசியாவின் ஜோதி யின் ரஷிப விஜயம், படம் பார், பத்தாயிரம் அடி, கலர்" என்று கூறி, இந்த 'அபின்' போதும் மக்களை மயக்க என்று எண்ணுகிறார்கள். முறையும் சரியல்ல, நீண்ட காலத்துக்குப் பலன்தரத்தக்கதுமல்ல. 0 0 0 "பாராளுமன்றத்தில் தொழிலுதவி நி ரிக் குழுவின் நிரூ வாகத்தைப் பற்றி நடந்த வாதம் சில முக்கியமான கருத்துக் களை வற்புறுத்தியுள்ளது. அவை நிருவாகத்தின் ஒழுங்கீன விவரங்களைவெளியிட்டதோடு கூட, இந்திய அரசாங்கம் அவற் றைக் குறித்துத்தக்க நடவடிக்கை எடுக்க வில்லையென்றும்,