பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

140 செய்த விசாரணைக் குழுவின் கொடுக்கவில்லையென்றும் 0 0 நிருவாகத்தை ஆராய்ச்சி ஆலோசனைகளுக்கும் மதிப்புக் குறிப்பிடுகின்றன. 0 நிதிக்குழுவின் நிருவாக ஒழுங்கீனங்களை, கணக்குத் தணிக்கையாளர்கள் விளக்கிக் கூறியிருந்தும், அரசாங்கம் யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 0 0 () எடுத்துக்காட்டாக சோடேபூர் கண்ணாடித் தொழிற் சாலைக்கு ரூ.2,000,000 சிறு தொகைகளாக 21 தவணைகளில் கொடுக்கப்பட்டது சோடேபூர் தொழிற்சாலை நிருவாகம் வேண்டுமென்றே ஒழுங்கீனமாக நடத்தப்பட்டதென்றும், அத னால் பெரு நட்டம் ஏற்பட்டதாகக் காட்டப்பட்டதென்றும், பின்னர் அதனுடைய போட்டித் தொழிற்சாலை அதிபருக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதென்றும், விசாரணைக் குழுவின் முன்னர் சான்று கூறப்பட்டது. இவ்வளவு ஊழல் களுக்கும் காரணமாயிருந்த நிருவாக ஆணையளருக்கு, அவரு டைய ஒப்பந்த காலம் முடிந்த பிறகு, ஆறுமாத ஊதியத் தொகையை இலவசமாக அளித்து, அவருக்கு ஒரு நற் சான்று பாராட்டுரையும் அரசினர் வழங்கியிருக்கிறார்கள்? பொதுமக்கள் நிதி இங்ஙனம் மோசடி செய்யப்பட்டதற்கு அர சாங்கமும் உடந்தையாயிருந்ததாகத்தான் கொள்ள வேண்டு மென்று, பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற காங் கிரசுக் கட்சித் தலைவர்,பண்டித் தாகூர்தாசு பார்க்கவா. சுட்டிக் காட்டியிருக்கிறார். 0 0 0 உத்தரப்பிரதேசக் காங்கிரசுக்குத் தலைவர் திரு. மோகன் லால் சாக்சேனா, காந்தி நினைவு நிதியிலிருந்து ரூ 1,65,00,000 தொழிலுதவி நிதியில் முதலீடாக வைக்கப்பட்டதென்றும், ஏழை மக்களிடமிருந்து சிறிது சிறிதாகச் சேகரிக்கப்பட்ட இத் தொகை ஒழுங்கீனமான முறையில் விரையமாக்கப் பட்டிருக் கிறதென்றும் கூறியிருக்கிறார். 0 0 அரசாங்கத்தின் நேரடியான 0 மேற்பார்வையிலிருந்த நிதியே இக்கதியை அடைந்திருக்கிறதென்றால், பொதுமக்கள் யாரை நம்ப முடியும்? 0 0 தமிழ்நாடு' தலையங்கத்தில் உள்ள 0 கருமுத்துக்கள் இவை?