பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

144 மேனியும், கருத்துச் சுருண்டு கவர்ச்சிகரமாகக் காட்சி தரும் தாடியுடன் கூடி தருமபுர த்தையும் காண்கிறேன். துள்ளித்திரியும் பருவத்தினர், துவண்டு போகும் நிலையினர், தொங்கு சதையினர், தோலால் எலும்புக் கூட்டினைப் போர்த் திருப்போர், சீமான்கள், அவர்களைக் சீமான்களாக்கியதால் சீரழிந்து கிடப்போர், மதி முகவதிகள், அது அற்ற நகைப் போதிகள், பலர், பலப்பலர்! அனைவருக்கும் இன்பம் அளித் திடும் அந்த அழகிய அருவி, என்றென்றும் இதே வள்ளற்றன் மையோடு இருந்திடுவதாக என்று வாழ்த்துவதுடன், நம் திருவிடத்தில் என்னென்ன இயற்கை எழில் காணக் கிடக் கிறது என்பதை எண்ணி எண்ணிப் பூரிப்படைகிறேன். தலபுராணம் எத்துணையோ இடங்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. படிப்போர், அகமும் முகமும் மலர்ந்து, நந்தம் நாட்டின் சிறப்புத்தான் என்னே! இத்துணை இடங்கள் உள்ள னவே பாவங்களைப்போக்க, என்று இறும்பூதெய்துகின்றனர்- தம்பி-நான் உள்ளபடியே வெட்கப்படுகிறேன், வேதனையு மடைகிறேன்--இவ்வளவு இடங்கள் தேவையாக இருக்குமள வுக்கா இங்கு பாபம் மலிந்து குவிந்து வளர்ந்து கிடக்கிறது என்பதை எண்ணிடும்போது. தத்தமது பார்வைக்குக் கொண்டு வரப்பட்ட இடங்களை, விடம்பரப்படுத்தும் முறை யில், தலபுராணங்களை ஆக்கினரேயன்றி, பிற எந்தநாட்டுக் கும் தேவையில்லாதிருக்கும் போது இங்குமட்டும் ஏன் இத்தனை பாபம் போக்கும் பதிகளும் நதிகளும்! இங்குள்ளோர் பாவச் செயல்களில் விடாமல் ஈடுபட்டுக் கிடக்கும் இழி தன்மையிலா உளர் என்பதுபற்றி எண்ணிப் பாராதாரில்லை. ஏனோ? 0 0 0 "ஐயா! உம்மை போட்டோ எடுக்கப் போகிறேன்." "என்னையா? ஏன்... "ஏன் என்பது கிடக்கட்டும். போட்டோ எடுத்துக் கொள்வதாலே உமக்கென்ன நஷ்டம், கஷ்டம், பணம் தர வேண்டாம்; இலவசமாகவே போட்டோ எடுத்துத் தருகி றேன். "இலவசமாக!......ஆச்சரியமாக இருக்கிறதே..." "நேரமாகிறது! ...... அப்படியே அந்த மரத்தடியில் நில்லும்... இதோ பாரும் சட்டையைக் கழட்டி விடும்... ‘சட்டையைக் கழற்றிவிடுவதா? ஏனய்யா? சட்டை நன்றாகத்தானே இருக்கிறது...33 ‘'அடா அடா! பெரிய தொண தொணப்பு ஆளாக இருக் கிறீரே. சட்டையில்லாமல் தானய்யா போட்டோ எடுக்க