பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

145 வேண்டும்... இதோ பாரும் ஊரெங்கும், நாடெங்கும்...... உம் போட்டோவை ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கில் அச்சிட்டு ஒட்டப் போகிறோம், தெரிகிறதா?எங்கும் உம் போட்டோ! மதில் சுவர்களில், மாட மாளிகைகளில், கடை வீதிகளில், வண்டிவாகனங்களில்,சினிமாக் கொட்டகையில், சிங்காரப் பூந்தோட்டங்களில், எங்கும் உம் போட்டோ இருக்கும்...” "புரியவில்லையே ......சரி..... நான் போட்டோ எடுத்துக் கொள்ள மாட்டேன்...” "பத்து ரூபாய் இனாம் தருகிறேன்..." (உஹும்...முடியாது... என்னமோ சூக்ஷமம் இருக் கிறது. ஐம்பது கொடுத்தால்தான் நான்ஒப்புக்கொள்வேன். "பேராசைக் காரரய்யா நீர்! இருபது தருகிறேன்...' "ஐம்பதுக்குச் சம்மதமானால் பேசு... இல்லையானால் போக லாம்...33 "சரி! சரி!...கழற்று சட்டையை ...... கைகளைத் தொங்க விடய்யா.... போதும்......சிரிப்புக் கூடாது..சும்மா பாரும் போதும்...3 போட்டோ எடுக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு எங்கு பார்த்தாலும் விளம்பரத் தாட்கள்! போட்டோ படத்தின் கீழ்... இப்படிப்பட்ட கடுமை யான குஷ்டரோகியும் எமது குஷ்ட விநாசனி தைலம் பூசிக் கொண்டால் முப்பது நாளில் பொன்னிற மேனி பெறுவர்!- என்று விளம்பரம் காணப்பட்டது. ஐம்பது ரூபாய் பெற்றுக் கொண்ட அப்பாவியை அவனுடைய நண்பர்களே கூட 'குஷ்டரோகி' என்று எண்ணி ஒதுக்க ஆரம்பித்தனர்!! 0 0 0 மருந்து விளம்பரத்துக்காக, அப்பாவியைக் குட்ட நோயாளனாக்கிக் காட்டியதுபோல, ஆறுகளுக்கும். திருக் குளங்களுக்கும், சோலைகளுக்கும், ஊர்களுக்கும் கீர்த்தியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, 'தலபுராணங்கள்' புனையப்பட்டன! அதனால், அந்தத் தலங்களின் மகிமை தெரிவதைவிட, விளக்கமாக, பாவச்செயல் புரிவோர் மிகுத்திருக்கிறார்களா என்று எண்ணித்தான் நம் போன்றார் ஆயாசப்பட வேண்டி இருக்கிறது. பாரேன் தம்பி. துவக்கத்தில் உள்ள பாடலை, பாவங் களின் பட்டியலைக் கொடுத்து, இவ்வளவு பாபங்களையும் போக்கும் பதி இது என்று கூறப்பட்டிருக்கிறது.