பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

146 பாவங்களைப் போக்கிடும் என்று மட்டும் கூறினால் போதாது, என்றெண்ணி, ‘தலபுராணக்காரர்' எல்லாப் பருவத்தினரின் பாபமும் போக்கப்படும் என்று வேறு கூறு கிறார். அறியாமல் இளமையில் செய் பாவமெலாம் நண்பக லில் ஆடத்தீரும்! காளையராய் மனதறியச் செய்த பாவம், சிறுகாலை படிந்திடில் போம்! வறிதான புன்மாலை படிந்தார்க்கு முதுமையில் செய் மாபாவம் போம்!! குற்றாலத்தில் முப்பொழுது ஆடில், எழுபிறப்பும் பெயர்க்கும்!!! இவ்வளவு மகிமை கூறப்பட்டிருக்கும் இருந்து கொண்டு இதை எழுதுகிறேன், தம்பி இருந்துகொண்டு என்றால் சாதாரணமாகவா! சிங்கம்பட்டி ஜெமீன் தார் மாளிகையில் இருந்துகொண்டு எழுதுகிறேன். அழகான மாளிகை! நான் உட்கார்ந்து எழுதிக்கொண்டி ருக்கும் கூடம், (தர்பார்' நடத்துவதற்கான இடம்! ஜெமீன் தாரரின் உருவப்படங்கள் என்னை நோக்கியபடி!! நுழைவு வாயலில் அவர் புலியுடன்-யானையுடன்-இருக் கிறார்- படங்கள்-வேட்டையில் அவர் சாகடித்தவை! ஏதேது! அண்ணனுடைய நிலை 'ரொம்பரொம்ப உயர்ந்து விட்டது போலிருக்கிறது, சிங்கம்பட்டி ஜெமீன் அரண்மனையிலல்லவா இருக்கிறார், என்று எண்ணிக்கொள் வாய். தம்பி, என் நிலை உயர்ந்துவிடவில்லை, சிங்கம்பட்டி ஜெமீன் நிலை அவ்விதமாகி விட்டது!! வாட சிங்கம்பட்டியின் இந்தச் சிங்கார மாளிகை போடி தாயக்கனூருக்கு வந்து சேர்ந்து, இப்போது ஒருவர் மொத்த வாடகைக்கு எடுத்து, சீசனின் போது, அன்றாட கைக்கு விடுகிறார். அந்த முறையில், இந்த மாளிகையின் ஒரு பகுதியை நாளொன்றுக்கு நாலு ரூபாய் வாடகைக்கு என நண்பர் மதுரை டாக்டர் அருணாசலம் எடுத்திருக்கிறார். அவருடைய விருந்தினன் நான்! புரிகிறதா! உன் அண்ண னுடைய நிலை உயர்ந்ததன் காரணம்!! கட்டினால் என்ன, கட்டிடத்தில் தங்கியிருந்தால் என்ன, இடம் எழில் நிரம்பியதாக இருப்பதால், களிப்பூறத்தான் செய்கிறது. இங்கு நின்று பார்த்தால், எதிரே தெரியும் சிறு குன்று, பச்சைப்பசேலென்றிருக்கிறது. அந்தப் பச்சைப் பட் டாடை அணிந்த பாவைக்கு முத்தாரம்போல அருவி! காலை