பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

147 யில் நீர்வீழ்ச்சி மாலையில் மக்கள் எழுச்சி!! காலையில் குளிக் கிறேன்! மாலையில் களிப்படைகிறேன்! காலையில், மலையும் அதன் பசுமையும், அருவியும் அதன் குளிர்ச்சியும், என்னி டம் ஏதேதோ பேசிடக் கேட்கிறேன். மாலையில், இத்தகைய இன்பக் காட்சிகளின் இல்லமாக உள்ள தாயகத்தின் நிலை பற்றி மக்களிடம் நான் பேசுகிறேன்!! செந்நெல்லுக்கு வரப்பு, வாழை! வாழைக்கு வரப்பு, கரும்பு! கரும்புக்கு வரப்பு, கதலி!' கதலிக்கு வரப்பு, கமுகு! கமுக்கு வரப்பு, தாழை! தம்பி. குற்றாலம்பற்றிய படப்பிடிப்பு இது! காண்போருக்கு கவிதை வடிவில் உள்ள காட்சி, அப்படியே தெரியத்தான் செய்கிறது. வளம் கொஞ்சும் இடம் இங்குகுறிப்பிடத்தக்க அளவுள்ள வயல், குற்றால நாதருக்கும் குழல் வாய்மொழி அம்மைக்கும் சொந்தம்! இந்த வயலின் செல்வம், தக்க முறையிலே 'குத்தகை விடப்படாததால், முழுவதும் நாதனுக்குச் சேருவதில்லை யாம்1! பூ! பூ குத்தகை முறையிலே குற்றம் கண்டுபிடித்துவிட் டார்களே, குறும்பர்கள்!! நமது ஆதீனத்துக் குத்தகைமுறை யினை அறியின் இம்மாந்தர் இதனினும் அதிகமாகக்கூடக் கண் டிப்பர்! ஆயினென்! இவர்தம் கண்டனத்துக்காக, எமது முறையினை மாற்றிக்கொள்ளவா இயலும், என்று கூறுபவர் போல், 'தருமபுரம்', நீர்வீழ்ச்சியில் குளித்திடக் காண் கிறேன்! மூவர் உடனிருக்கிறார்கள், அவருக்கு ‘சேவை’புரிய. அவரோ காச்கி உடையற்ற, ராணுவ வீரர் போலவே, அந்த வழுக்குப் பாறைகளிலும், கூழாங்கற்களிலும் நடந்து செல் கிருர்? ப்யூக் கார் காத்துக் கொண்டிருக்கிறது அவருக்காக!! முறை மாறித்தான் விட்டது! ஆனால், அவருக்கு நலன் அளிக்கும் துறையில் மட்டும் தான்! அரன் அருளை, ஆயிரக் கணக்கான வேலிநில உருவில் பெற்று வாழும் ஆதீனகர்த்தா அவருடைய, 'இரும்புப் பல்லக்கில்', ஏறுகிறார். திருவருள் கண்டதும் கடுவேகத்துடன் காமக்குரோத மதமாச்சாரி யாதிகள் பறந்து செல்கிறதாமே, அது போல, 'ப்யூக்' செல் கிறது. போகட்டும்!! இதோ நீர் வீழ்ச்சி!! வேகம் குறைவு, சாரல் சுகம் அவ்வளவு இல்லை, தண்ணீ ரின் அளவும் குறைவு என்கிறார் பொன்னம்பலனார் - அவருக் குக் குறைவாக இருப்பது, எனக்கு அதிகமாகத்தானே இருக்