பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

156 தெரியவில்லை, அவர்தம் நெஞ்சை இன்று ஆட்கொண்டிருப் பது, அன்றைய ஆரிய தவசிகள் முறைதானோ என்று எண்ணத்தக்க வகையில், காரியம் பல நடைபெற்று, மூடி மறைக்கப்பட்டதுபோக, புடைத்து வெடித்து வெளியே சில தெரிந்திடக் காண்கிறோம். துறவிகள் தவசிகளாகிவிட்டனர். தம்பி, துறவிகளின் நிலைபற்றிய எண்ணம் குடைந்தநிலை யிலிருந்த எனக்கு, ஒரு துறவி பற்றிய சிறு ஏடு படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜெரோம்-கெ-ஜெரோம்-என்பவர், ஆங்கிலஉரைநடை யாசிரியரில் கீர்த்தி பெற்றவர். நகைச்சுவை ஏடுகள் தீட்டு வதில் சமர்த்தர். அவர்தம் ஏடுகள், பல்வேறு மொழிகளிலே வெளியிடப்பட்டன. அவருடைய புத்தகமொன்று படித் தேன், குற்றாலத்தில். கதைதான்! மிகமிகச் சாதாரணமான கதை! அதிலே சரசம் சாகசம், சதி துப்பறிதல், கொலை வஞ்சம் தீர்த்தல். இயற்கை வருணனை,வழக்கு மன்ற வாதம், இவைகள் ஏதும் கிடையாது. ஒரு சாமான்யனுடைய மிகச் சாதாரணமான கதை. கொல்லன் மகன் ஒருவன், உழைப்பாலும் திறமை யாலும் ஏழ்மையை விரட்டி அடித்து, செல்வவானான வாழ்க்கை வரலாறு. காதல், நெஞ்சை அள்ளத்தக்க வகை யில் இல்லை! நள்ளிரவு சந்திப்புகள், நயவஞ்சகனின் எதிர்ப்பு, ஏந்திழையாள் உகுத்த கண்ணீர், இவன் இதயத் தைத் துளைத்திடுவது இதெல்லாம் இல்லை. சாதாரண கதை. சரி, கேளேன், கதையைத்தான். அந்தனிஜான் என்பது நூலின் பெயர்; கதாநாயகன் பெயரும் அதுதான். அந்தனி, ஒரு கொல்லன் மகன்! தந்தை கடுமையாக உழைக்கிறார். போதுமான வாழ்க்கை வசதி கிடைக்கவில்லை. தாயார் பாடுபடுகிறார். குடும்பம், தட்டித்தடுமாறி நடந்து கொண்டிருக்கிறது. சிறுவனாக இருப்பது முதலே, அந்தனி, சுறுசுறுப்பும் அறிவுத் திறனும் மிகுந்தவனாக இருக்கிறான். எதையும் துருவித்துருவி ஆராய்கிறான், ஏன்? ஏன்? என்ற கேள்விதான் அவனுக்கு அரிச்சுவடியாக அமைகிறது. முறைப்படி அந்தனியைப் படிக்க வைக்கிறார்கள்; கல்வி யில் அவன் கருத்தூன்றிப் பலன் காண்கிறான். அவன் மாமன், ஒரு முரடன் ஊரார். அவனை நாத்திக னென்கிறார்கள். அவனிடம் அந்தனி, அன்பு கொள்கிறான். அந்தச் சிற்றூரில் ஒரு சீமான் குடும்பம்! சீமான் வழக்கறிஞர், வணிகர், இதனாலேயே சீமானான வர்; நல்லவர்; பிறருக்கு உதவிபுரியும் நன்னெஞ்சினர்.