பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

157 அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் பெயர், பெட்டி. அந்தக் குடும்பத்தின் உதவி கிடைக்கிறது, அந்தனிக்கு பெட்டி அந்தனியிடம் பாசம் கொள்கிறாள். அது காதலாக மலரும் என்று பலரும் கருதுகிறார்கள்! தேர்ச்சிபெற்று, அந்தனி, தன் குடும்ப தொழிலில் நிலையை உயர்த்துகிறான். ஊழியனாகச் சேர்ந்தவன், நாளா வட்டத்தில், சீமானு டைய தொழிலில் பங்காளனாகிறான்; பணம் குவிகிறது; படா கெடாத வகையில் டோபம் தலை தூக்கவில்லை; பண்பு வாழ்க்கை நடத்துகிறான். எல்லோரும் அந்தனி, சீமானின் மருகனாவான் என்று எதிர்பார்க்கிறார்கள். பெட்டியும் மறுத்திருக்க மாட்டாள். எனினும் அந்தனியின் மனம் வேறார் மங்கையை நாடுகிறது. பெட்டி கண்ணீர் பொழியவுமில்லை, "காதகா! பாத்கா! கனவு கண்டதெல்லாம் பொய்த்துப்போய் விட்டதே! இனி என் எதிரே நிற்காதே! என் மாளிகையில் உனக்கு இடம் கிடையாது. நட, நட!" என்று கனல் கக்கவில்லை. எலினார் மணமகளாகிருள். குடும்பம் குதூகலமாக நடந்து வருகிறது - குழந்தைகள் பிறக்கின்றன. சீமானும் அவன் மகனும் இறந்து படுகிறார்கள். அந்தனி, ஏழைகளுக்கு இதம் தரும் பணிகள் பல செய் கிறான். புகழ் பெறுகிறான். -எனினும் அவன் மனதில் சாந்தி இல்லை. கடவுள் பற்றி அவன் சிறு வயது முதல் சிக்கல் நிரம்பிய சிந்தனையில் ஈடுபடுகிறான். முடிவில், கடவுள் தன்மை பற்றி இதுவரை கூறப்பட்டு வந்த கொள்கைகள் பொருளற்றவை என்று உணருகிறான். ஏழைகளுக்கு உதவுவதற்காகப்பொருள் ஈட்டுவது முறை தான் என்று எண்ணிக்கொண்டிருந்தவன், அதுவும் தவறு என்று உணருகிறான். உண்மையான தொண்டு, தன்னலமற்றதாக இருத்தல் வேண்டும் என்று உணருகிறான். மிகுந்த செல்வ நிலையில் இருந்தவன், அனைத்தையும் துறந்துவிடத் தீர்மானிக்கிறான். மீண்டும் ஏழைகளிடையே சென்று, எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டு, அவர்களுக்கான பணியாற்றமுனைகிறான்,