பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

159 அவன் ஒரு எடுத்துக்காட்டாக, விளங்கினான், எனினும், உடைமைகளை உதறிவிட்டு, உயர்ந்த இடத்தை விட்டு விலகி, எளிய வாழ்க்கையையும் ஏழையர் உலகிலே ஒரு இடத்தையும் மீண்டும் கொள்கிறான் - துறவியாகிறான். துறவின் மூலம், அவன் வானுலகில் இடம் கேட்டா னில்லை - வணங்கத்தக்க தெய்வத்தினிடம் வரம் கேட்க அல்ல, அவன் துறவியானது. துடிக்கும் ஏழையர்க்குத் தொண்டாற்றத் துறவியாகிறான். அந்தத் துறவியுடன், நாம் காணும் ஆதீனத் துறவிகள், அஷ்ட ஐஸ்வரியத்தைப் பெற்று ஆனந்த வாழ்வு நடாத்தும் துறவிகள், ஆகியோரை ஒப்பிடும்போது, நெஞ்சு நெகிழத் தான் செய்கிறது. அந்தனிஜான் கதையில் சிறுசிறு சம்பவங்கள் மூலம், ஆசிரியர், அரிய கருத்துக்களை அள்ளித் தருகிறார். இந்தச் சம்பவங்களின் மூலம், படிப்படியாக. அருள்நெறி எவ்வகையில் இருக்கும் என்பதையும், கடவுட் கொள்கை பற்றிய கருத்துக்களில் எவ்வளவு பொய்ம்மையும் பொருளற்ற வையும் உள்ளன என்பதையும் ஆசிரியர் அழகுற எடுத்து விளக்குகிறார். அந்தனி சிறுவனாக இருந்தபோது ஒரு சம்பவம் - கவனி தம்பி! கருத்துக்கு விருந்து! ஒரு மாலை, ஆறேழு பேர்கூடி, பஜனை செய்துகொண் டிருந்தனர். கடவுள், பரமண்டலத்தில் இருக்கிறார். அவருடைய சன்னிதானத்தின் முன்பு அனைவரும் தொழுது நிற்கவேண் டும். ஆண்டவனிடம் 'பயபக்தி விசுவாசம்' இருக்க வேண் டும் - என்று ஒரு மாது கூறினார்கள். சிறுவன் அந்தனிக்கு, தொழிலகக் கதவைத் திறந்து வைத்துவிட்ட நினைவு வந்தது; ஓடிச்சென்று கதவை மூடிக் கொண்டு உள்ளே வந்தான். அருள் பாலிக்கும் ஆண்டவன் அனைவரும் போற்றுதும் வாரீரோ என்று பஜித்தனர். அந்தனியின் தாயார், அடிக்கடி வெளியே சென்று, பல பண்டங்களை பெற்றுக்கொண்டு வருவதுண்டு.எங்கே, யார் தருகிறார்கள், என்பது சிறுவனுக்குத் தெரியாது. ஆனால் நல்லதைத் தருபவர் ஆண்டவன் என்று பஜனை நடத்தியோர் கூறிடக் கேட்டதால், தன் தாயாருக்கு இந்தப் பொருளைத்