பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

161 மனதிலே ஆண்டவன்தானே, கருணை பிறக்கச் செய்கிறார்; அதனால்தானே நமக்கு சர். வில்லியம் இந்த உதவியை செய் கிறார்; எனவே நமக்கு ஆண்டவன்தான் இந்தப் பொருளை எல்லாம் தருகிறார் என்று சொல்லவேண்டியது தான்!- என்று மேலும் விளக்கமுரைத்தாள் அன்னை. சிறுவன் ஒரு கணம் யோசித்துவிட்டு, ‘ஆனால்,அம்மா! இந்தப் பொருள், சர். வில்லியமுடையதுதானே" என்று கேட்டான். "ஆமாம்! ஆனால் ஆண்டவன்தான் அவருக்கு அவை களைக் கொடுத்தார்" என்று தாயார் கூறினாள். கடவுள் இப்படி சுற்றி வளைத்து நடந்துகொள்வது சரியான வழியாக அந்தோனிக்குப் படவில்லை. "ஏனம்மா, கடவுள் நமக்கு இந்தப் பொருள்களைத் தர மாட்டேனென்கிறார்! நம்மிடம் அவருக்கு ஆசை இல்லையா?"" என்று சிறுவன் கேட்டான். என்ன பதில் கூறமுடியும்! பாபம்! அந்த மாது சரி, சரி, இப்படியெல்லாம் கேட்கக்கூடாது; தெரிகிறதா; என்று கூறித்தான் சிறுவனை அடக்க முடிந்தது! ஆனால் மனம்? சிந்தனை? இன்னும் சர்வ சாதாரணமாக மேதைகள்' கூறிடும் வகையிலேதான், அந்தனியின் தாயார் பேசுகிறார்கள்! கொடுக்கும் ஆள் யாராக இருந்தாலும், கொடுக்கும் கரம் ஆண்டவனுடையது என்பதுதான், எங்கும் எவரும் பேசும் தத்துவம்! அந்தத் தத்துவத்தைக் கூறிவிட்டு, அந்த மேதைகள் தமது அறிவுத் திறனைக்கண்டு, தமக்குத் தாமே பாராட்டிக்கொள்கிறார்கள்! சிறுவனல்லவா, கேட்கிறான் - ஏனம்மா! ஆண்டவன், இப்படி சுற்றிவளைத்து வேலை செய்கிறார். நமக்கு உதவி செய்ய விரும்பினால், ஏன் நேரடியாகச் செய்யக்கூடாது!- என்றல்லவா கேட்கிறான். அவன் வாயை, அன்னை அடக்கிவிடுகிறார்கள்! அந்த அன்னை மட்டுமா-இன்று மேதைகளும் சிக்கலான, சங்கட மான, அடிப்படையை ஆராயும் விதமான கேள்விகளைக் கேட்பவர்களின் வாயை அடைக்கத்தான் முனைகிறார்கள். வாய் மூடிக்கொண்டான், அந்தனி! ஆனால் மனம்? சிந்தனை? சும்மாவா இருக்கும்! அடக்க அடக்க, வேகமாக வேலை செய்கிறது. 0 0 0 நியூட் மாமாவை, நாஸ்திகன் என்று பலரும் கூறினர், அந்தப் பாளையத்துக்குப் பணியாற்றவந்த பாதிரிமார்கள் ஒவ்