பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

162 வொருவரும், இந்த நாத்திகனைத் திருத்தி வெற்றி காண வேண்டுமென்று வெகு பாடுபட்டனர். ஆனால் நியூட் மாமாவோ, பிடிவாதமாக இருந்து வந்தார்! நரகத்தில் சிக்கி அவன் நாசமாகப்போவது திண்ணம் என்று பலர் பேசுவர்; நரகம் என்றால் கொடியவர்களைத் தண்டிக்கும் இடம் என்று அந்தனி கேள்விப்பட்டிருக்கிறான்! நியூட் மாமாவைப் பார்த்தாலோ, கொடியவராகவே தெரிய விலலை! எனினும் அவர் நரகத்தில் தள்ளப்படப்போவது நிச்சயம் என்று மாமியே கூறுகிறார்கள்! "மாமி! மாமா, மிகவும் கொடியவரா?" 'கொடியவரல்லடா! எவ்வளவோ கொடியவர்களை நான் பார்க்கிறேன், உன் மாமா அப்படிப்பட்டவரல்ல ” "அப்படியானால், அவர் ஏன் நரகம் செல்லவேண்டும்?" "போகத் தேவையே இல்லையே! அவராக அல்லவா, நம்பிகை கொண்டாரானால். காப்பாற்றப்படுவார்! நரகம் போகத் தேவையே இல்லையே" "நம்பிக்கையா? எதை நம்பச் சொல்கிறீர்கள்? பிடிவாதம் பிடிக்கிறார்! "விவரமாகச் சொல்ல எனக்கு நேரமில்லை சொல்வதை நம்பினால் போதும்; உன் மாமா அதைத்தான் செய்யமாட்டே னென்கிருர்க "யார் சொல்வதை நம்பவேண்டும் என்கிறீர்கள்?*` "எல்லோரும் சொல்வதைத்தான். நானே எத்தனையோ முறை சொல்லி இருக்கிறேன்-கேட்டால்தானே. ஏதேது அடுக்கிக் நீயும் உன் மாமனைப்போலவே கேள்விகளாக கொண்டே போகிறாயே. இப்படி எல்லாம் பல கேள்விகள் கேட்கக்கூடாது -- தெரிகிறதா!> சிறுவனுடைய வாயை மாமி அடக்கிவிட்டாள். ஆனால் மனம்? சிந்தனை? தூங்கிவிடுமா என்ன? அது கொதித்துக் கொண்டேதான் இருந்தது. அன்னையும், மாமியும் சிறுவனுடைய சந்தேகத்தைத் துடைக்கவில்லை. விருப்பம் இல்லாததால் அல்ல, அவர்களால் இயலவில்லை! இப்போது மட்டுமென்ன? எந்த மேதை, விளக்கம் அளிக்கிறார் - சந்தேகத்தை நீக்குகிறார். சீறுகிறார் சபிக்கிறார். போக்கிரித்தனமான பேச்சு இது, நாத்திகப் போக்கு, என்று நிந்திக்கிறார். 0 0 0 "மாமா! நீ, ஏன் நம்பிக்கை கொள்ளக் கூடாது?" "எதை நம்புவது? "எல்லோரும் நம்புவதைத்தான்"