பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

163 "அவர்களை நம்பாதே அந்தனி, நம்பாதே. அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையில், அவர்கள் யாருக்கும், நம்பிக்கை கிடையாது. சும்மா, அப்படிச் சொல்லி வைக்கிறார்கள். ஏதோ அந்த நம்பிக்கை மூலம் பலன் கிடைக்குமென்று எண்ணி அவ்விதம் சொல்கிறார்கள்." சிறுவனுடைய சிந்தனையையும் கிளறிவிட்டான் ; அருகே இருந்த நெருப்பையும் கிளறிவிட்டபடி, மாமன் மேலும் பேசலானான். "அவர்கள் எதெதில் நம்பிக்கை இருப்பதாகச் சொல் கிறார்களோ, அவற்றிலே அவர்களுக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், இந்த உலகமே உத்தமபுரியாகி இருக் குமே! அதைத்தான் நான் அவர்களிடம் பல முறை கேட்கி றேன். பதில் கூறினதில்லையே அவர்கள், கூறமுடியாதே!" மாமன், பேச்சை நிறுத்தவில்லை. "போகப்போக நீ அவர்களுடைய போதனைகளை எல் லாம் தெரிந்துகொள்வாய். உன்னைப்போல் பிறரையும் நேசி அனைத்தையும் ஏழை எளியோருக்கு கொடு அவர்களுக்கு ஆண்டவன் கூறுவது இது. அவர்கள் அது போல நடந்துகொள்வதை நீ கண்டது உண்டா? அவர்கள் நம்பிக்கை கொள்வதைக் காண்கிறபோது, நானும் நம்பிக்கை கொள்வேன்." 0 0 0 பஞ்சம், வேலை நிறுத்தத் தொல்லை, குளிர் கொட்டு கிறது. வறுமை போட்டியிடுகிறது. நிலக்கரிச் சுரங் கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேலை நிறுத்தம் முடிவடைந்தது. அப்பாடா, என்று ஆறுதல் கூறுவ தற்குள் எஃகுத் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் கிளம்பி விட்டது, மொத்தத்தில் ஏழைகளுக்குக் கடுமையான சோத னைக் காலமாக இருந்தது. அந்தனிக்கு, கடவுள் ஏன் இதை அனுமதிக்கிறார் என்று ஆச்சரியம். மாமியிடம் பேசுகிறான். "கடவுள் ஏன் இதனைத் தடுத்து நிறுத்தக்கூடாது!! "எதை நிறுத்துவது? "வேலை நிறுத்தத்தைத்தான் மாமி! ஏன் கடவுள் அனைத் தையும் சரியாக வைத்திருக்கக்கூடாது? அவரால் முடி யாதா.33 "ஏன் முடியாது. நிச்சயமாக முடியும். அவர் மனது வைத்தால் ஆகாத காரியம் உண்டா?"