பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

164 "ஏன் அவர் மனது வைக்கவில்லை, மாமி! அனைவரும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்ப வில்லையா! "அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பது தானடா, அவருடைய விருப்பம்.ஆனால் மக்கள் கெட்டவர் களாக இருக்கிறார்கள்; பிறக்கும் போதே கொடியவர்களா கிறார்கள்! "ஏன் நாமெல்லாம் பிறக்கும்போதே கொடியவர்களாகப் பிறக்கிறோம். ஆண்டவன்தானே நம்மை எல்லாம் படைக் கிறார்!>> "அனைவரையும் அவர்தான் படைத்தார், அதிலென்ன சந்தேகம், எல்லாம் அவர் சிருஷ்டி133 "ஏன், அவர் நம்மை நல்லவர்களாகப் படைக்கவில்லை?" "அவர், நல்லவராகத்தான் அனைவரையும் படைத்தார் ஆதாமும் ஏவாளும், அவர் படைத்தபோது பரிசுத்தப் பிறவி கள்!ஆனால் அவர்கள் ஆண்டவனுடைய கட்டளையை மீறி, (பாபப்) பழத்தைத் தின்று தொலைத்தனர். இல்லையானால் நாமெல்லாம் நல்லவர்களாகவும் பிறந்திருப்போம். ஆனந்த மாகவும் வாழ்ந்து கொண்டிருப்போம்." "ஆதாம் என்பவன்தான் முதல் மனிதன்! அப்படித் தானே மாமி!" "ஆமாம்! ஆண்டவன் ஆதாமைப் படைத்தார், நல்ல வனாகத்தான் 35 "எவ்வளவு காலத்துக்கு முன்பு நடந்தது மாமி, இந்தச் சிருஷ்டி." "ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு!" '"மாமி! தவறு செய்துவிட்டேன், மன்னித்து அருளுக! என்று ஏன் ஆதாம் கூறி, ஆண்டவனுடைய மன்னிப்பைப் பெறவில்லை?' "விபரீதம் நேரிட்டுவிட்டதே.ஆதாம் என்ன செய்யமுடி யும்?பழத்தைத் தின்றான பிறகு, பகவானிடம் முறையிட்டு என்ன பலன்?32 "சாத்தான், ஆதாமையோ ஏவாளையோ, கெட்ட நினைப் புக்கொள்ளும்படி தூண்டினானே, ஏன் கடவுள் அதைத் தடுக்கவில்லை? கடவுள் சர்வசக்தி உள்ளவர்தானே! சாத் தானை ஏன் அழித்திருக்கக் கூடாது!33 மாமி, மருண்டு போனாள்! போக்கிரிப்பயல், என்னென்ன கேள் விகளைக் சேட்கிறான்! என்று கோபங்கூட வருகிறது. "சரி, பள்ளிக்கூடத்திற்கு நேரமாகிறது. போ, போ என்று கூறி, அவனை அனுப்பிவிடுகிறார்கள். அந்தனியும்