பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

166 களின் வாழ்வில் ஒரு குளிர்ச்சியும் மலர்ச்சியும் காணவேண் டும் - என்று எண்ணினான். அந்தனி. லாண்டிரிப் என்பான் கட்டிட வேலையில் நிபுணன், அந் தனிக்கு நண்பனானான். திறமையுள்ளவன் மட்டுமல்ல, புதிய தத்துவங்களில் நாட்டமுள்ளவன், லாண்டிரிப். மக்கள் பணியே மகேசனுக்கு உகந்த பூஜை! ஏழைகள் இதயத்தில் களிப்பூட்டும் பணிபுரிதலே பக வானுக்குத் தேர், திருவிழா, யாவும்! தூய உள்ளமே கோயில்! நலிந்தோரைத் தேற்றுவதே தோத்திரம்! மக்களிடம் சகோதரத்துவம் மலரவேண்டும்; அதற்கு அன்பு ஆட்சி செய்தல் வேண்டும். ஒரு பகுதி மக்களைச் சேற்றிலும் சகதியிலும் நெளியும்படி விட்டு வைப்பது சமுதாய முழுவதையுமே நாசமாக்கும். பிறரையும் மகிழ்ச்சியுடன் வாழச் செய்தால்தான், நாம் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். இவைகளே லாண்டிரிப் போற்றி வளர்த்துவந்த கருத் துக்கள். சர்வ வல்லமை உள்ளவர், சர்வேஸ்வரன், ஏன்மனி தனை அறிவுச் சூனியனாகவும் குற்றங்கொள் கலமாகவும் படைக்க வேண்டும்! சுயநலம், பேய்க்குணம், வெறிச்செயல், இவைகளிலே மூழ்கிடும் போக்கினனாகும் நிலையில் மனிதனைப் படைக்காமல் துவக்கத்திலேயே மனிதனை, 'நித்யானந்தத்தை! அனுப விக்கத்தக்க, ஆற்றலைப் பெறக்கூடியவனாகவும், அருங்குண வானாகவும், ஏன் படைத்திருக்கக் கூடாது! இது, அந்தனியின் மன திலே நீண்ட நாட்களாக இருந்து வரும் சிக்கல். கிறிஸ்துவின் புனிதக் காதை மூலம், இந்தச் சிக்கலைப் போக்கிக் கொள்ள முடியவில்லை. கிறிஸ்துவின் புனித மொழி களின்படி நடந்து கொள்பவர்களே, மிகமிகக் குறைவு! மேலும், தவறுகளைச் செய்துவிட்டுப் பிறகு அதனைத் திருத் தும் நிலையில் ஏன்கடவுள் இருக்கவேண்டும், முறை அல்லவே என்று அந்தனி எண்ணினான். லாண்டிரிப் சொன்னான்: "நான் வணங்கத்தக்க கடவுள் ஒருவர் உண்டு; பூவுலகத்தையும் பரமண்டலத்தையும் சமைத் தவர் அல்ல அவர்; விண்மீன்களையும் பிரபஞ்சத்தையும் படைத்தவரல்ல!கடியாரம் காண்கிறோம், அதை ஆக்கினவன் ஒருவன் உளன் என்பது அதன் மூலம் தெரிகிறது, என்கிறார்