பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

167 கள். தத்துவம் சரி ! ஆனால் என் உள்ளத்துக்கு உகந்த ஈசன் பிரபஞ்சத்தைப் படைத்த பெரியவன் அல்ல, ஆக்கவும் அழிக்கவும வல்ல பரம்பொருள் என்கிறார்களே, அதனிடம் என்மனம் இலயிக்கவில்லை. உலகின் கேடுகளைக் களைந்திட, உழைத்திடும் உத்தமனாகவும், அந்தத் திருத்தொண்டிலே, என்னைப் பங்கு கொள்ளும்படி செய்பவனாகவுமுள்ள, காப் பாளனை, உழைப்பாளனை, நான் கர்த்தனாகக் கொள்கிறேன். இது நாள் வரையில், மக்கள், தங்கள் மனதிற்குப் பட்ட வகையிலே தாமே ஆக்கிக்கொண்ட கடவுளைத் தொழுது வரு கிறார்கள்; சர்வசக்தி வாய்ந்தவர்! தேஜஸ் மிகுந்த தேவாதி தேவன்! வரம் அருளும் வல்லமை படைத்தோன்! தீயோ ரைத் தண்டிக்கும் ஆற்றல் மிக்கோன்! என்றெல்லாம் பூஜிக் கிறார்களே, அந்தக் கடவுளை அல்ல நான் தொழுவது, என் ‘கடவுள்' கேட்ட வரம் அருளுபவால்ல,அவர் என்னிட மிருந்து, அன்பு, நேர்மை, தூய்மை இவைகளைக் கேட்பவர், என்று கூறினான். அந்தனியின் மனதிலே புதிய கருத்துக்கள் தூவப்பட்டன என்றே சொல்லலாம். கடவுளைப் பற்றிய கருத் துரைகளில், இது அந்தனிக்கு ஒருவகையில் பிடித்திருந்தது. 0 0 0 எலினார், பிழைத்துக்கொண்டாள். ஆபத்து, விலகிவிட் டது. அந்தனியின் உள்ளத்திலே சொல்லொணாத மகிழ்ச்சி. ஆண்டவன் அருள் பாலித்துவிட்டார். நான், ஏழைகளுக் காகத் தொண்டாற்றினேன்; தூயவர், என்பால் திருநோக் கைத் திருப்பி, என் ஆவியை என்னிடம் ஒப்படைத்து விட் டார்; என் இதயராணி பிழைத்துக்கொண்டாள். பெரியவர் கள் சொல்லிச் சென்ற தத்துவங்கள் முற்றிலும் உண்மை தான். சத்யவாக்குத்தான் அவை. நீ இன்னின்ன நல்ல காரியங்களைச் செய்,நான் அதற்கு ஈடாக உன் மனைவிக்குவந்துற்ற ஆபத்தைப் போக்குகிறேன், என்ற முறையில் ஆண்டவன் நடந்து கொண்டாரே, வியா பார ஒப்பந்தம் போலல்லவா இது இருக்கிறது--சரியாகுமா இந்த முறை - என்று கேட்பர்; ஒப்பந்தம் என்றே வைத்துக் கொண்டால்தான், என்ன தவறு! எனக்கு எலினாரிடம் உள்ள பாசத்தையே சாக்காக்கிக்கொண்டு, கடவுள், என் மூலம் ஏழை களுக்கு நலன் கிடைக்கச் செய்திருக்கிறார்; இதிலே என்ன குற்றம் காணமுடியும்? என் மக்களுக்காக நீ, இன்னின்ன நலன்களைச் செய்துகொடு, நான் உன் இல்லக்கிழத்தியின் இன்னுயிரை மீட்டுத் தருகிறேன் என்று கடவுள் கூறுகிறார் என்றே வைத்துக் கொள்வோம்; இதிலே தவறு என்ன- என்று அந்தனி எண்ணி மகிழ்ந்தான். ஆனால் மகிழ்ச்சியும்