பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

172 ஏழைகளுக்குப் பகிர்ந்து அளித்தாலும், மீண்டும் தொல்லை யும், துயரமும் தலைவிரித்தாட அதிக காலம் பிடிக்காது. தன்னலம் தலைதூக்கும். பேராசை பேயாட்டமாடும் ஏழைகளுக்குக் காசு வீசிடும் கருணாமூர்த்திகள், பன்னெடுங்காலமாகவே இருந்து வருகிறார்கள். ஏழைகள் தொகையோ வளர்ந்து கொண்டே இருக்கிறது. பணம் சர்வ ரோக நிவாரணியல்ல. சேவை, தன்னலமறுப்பு இவை மூலமாகவே பலன் காண முடியும். எனவே, நான், என் தாயார் வசிக்கும் விடுதிக்குப் பக்கத்தில், ஒரு சிறு குடிலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு. அங்குதான், ஏழைகளின் தோழனாக வாழ்க்கையைத் துவக்கப் போகிறேன். அவர்களுக்கு உதவி செய்வதே வாழ் வின் குறிக்கோளாக்கிக்கொள்வேன். வழக்குகள் ஏழை களுக்குள் கிளம்பினால், வழக்கறிஞனாக நான் சமரசம் செய்து வைப்பேன். என் தேவைக்கானதை நான் சம்பாதித்துக் கொண்டு, எளியோருடன் எளியோனாக வாழ்க்கை நடத்தப் போகிறேன். மனை விமக்கள் இல்லாத துறவிகள் மட்டும் போதும், தூய் மையையும் வாய்மையையும் வெற்றி பெறச் செய்ய என்று கொள்வதற்கில்லை.குடும்பத்துடன் உள்ள துறவிகள்தேவை ; நான் அத்தகைய துறவி ஆகப் போகிறேன். 0 0 0 எலினார், எளிய வாழ்க்கையில் ஈடுபட, எல்லாம் இருந் தும் அனைத்தையும் துறந்து விட்டு அன்றாடம் தேடிப் பெற்று வாழ்க்கை நடத்துவதை ஏற்றுக்கொள்ளுவாளா? ெசல்வத் தைக் கண்டவள்! சுகத்தை அறிந்தவள்! எப்படிஇவைகளை விட்டுவிட மனம் வரும், என்றெல்லாம் அந்தனி எண்ணிக் குழப்பமுற்றான். ஆனால் அந்தக் குணவதியோ, அவன் கூறி யதே செந்நெறி என்று உணர்ந்தாள்; தன்னல மறுப்பு, ஏழையர்க்குத் தொண்டாற்றுதல், உடைமைகளைக் கட்டிக் காத்து அவைகளுக்கு அடிமையாகிச் சிதைந்து போகாதிருத் தல், இவையே உண்மைத் துறவியின் இலட்சணம் என்பதை, அந்தனி மூலம் அறிந்தாள்; அகமகிழ்ச்சியுடன், அவன் துவக்கத் தொடங்கிய புதிய வாழ்க்கையில் துணை நிற்க இசைந்தாள். துணைவியுடன் ஏழையர்க்குத் தொண் டாற்றக் கிளம்பினான், அந்தத் துறவி. 0 0 தம்பி, 'தருமபுரத்தைக்'க் கண்ட அன்று, நான் கதை யில் இந்தத் துறவி'யைச் சந்திக்கிறேன் என்றால், என் உள்ளம் எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்!